சென்னை: சென்னை அயனாவரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக, மனைவியை பிரியாணி கரண்டியால் தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
சென்னை அயனாவரம் வசந்த் கார்டன் பகுதியை சேர்ந்தவர் உமர். வயது 37. இவருக்கும் 36 வயதுடைய சையது அலி பாத்திமா என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. கல்யாணம் ஆனது முதலே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை போல அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
10ம் தேதியும் இருவருக்கும் இடையே இரவு நேரத்தில் சண்டை மூண்டுள்ளது. வாய்த்தகராறாக ஆரம்பித்த சண்டை உச்சத்திற்கு போய் அடிதடியாக மாறியது. கோபமடைந்த உமர், ஆத்திரத்தில் வீட்டில் வைத்திருந்த இரும்பு பிரியாணி கரண்டியை எடுத்து மனைவியை கடுமையாகத் தாக்கி விட்டார்.
இரும்புக் கரண்டி என்பதால் பாத்திமா கடும் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பாத்திமாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாத்திமா இன்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
பாத்திமாவின் தாய் பல்கீஸ் பீவி அயனாவரம் போலீசில் மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன் பேரில் உமர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவாகியுள்ளது.
புருஷன் பொண்டாட்டி சண்டை இயல்புதான்.. அதற்காக இப்படியா கண்மூடித்தனமாக நடந்து கொள்வது.. சண்டை வருதா, வாக்குவாதம் வருதா.. கோபம் வருதா.. யாராவது ஒருவர் அமைதி ஆயிடுங்க.. கோபம் வரும் போகும், ஆத்திரம் வரும் போகும்.. ஆனால் உயிர்.. ??
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}