ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
இந்தக் கட்டடங்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு ஜேசிபி இயந்திரங்கள் வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த ஹைதராபாத் நகரமானது, தெலங்கானா மாநிலத் தலைநகராக இருந்தாலும் கூட இது திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல், சந்திரபாபு நாயுடுவின் தூண்டுதலின் பேரில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதைச் செய்திருப்பதாக ஜெகன் மோகன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
ஹைதராபாத் நகரின் லோட்டஸ் பான்ட் பகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்புறம் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முதல்வரின் பாதுகாப்பு ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டவையாகும். அதாவது ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போது கட்டப்பட்டவை. ஆனால் இவை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன, சட்ட விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என்று தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன.

இருப்பினும் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தவரை இதுகுறித்து ஹைதராபாத் மாநகராட்சி கண்டு கொள்ளாமல் இருந்தது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழந்துள்ள நிலையில் இன்று ஜேசிபி இயந்திரங்களோடு வந்து இந்த கட்டடங்களை அதிகாரிகள் இடித்துத் தள்ளி விட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}