சிகாகோ : அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார களம் விறுவிறுப்படைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரீஸ் குறித்து முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சி வேட்பாளருமான டிரம்ப் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த சமயத்தில் கமலா ஹாரீஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போட்டுள்ள பதிவு அமெரிக்கர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தாய் மற்றும் தங்கையுடன் இருக்கும் தன்னுடைய சிறு வயது போட்டோவை பகிர்ந்துள்ள கமலா ஹாரீஸ், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய அம்மா சொந்தமாக வீடு வாங்குவதற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணத்தை சேமித்து வைத்தார். நான் டீன் ஏஜில் இருக்கும் போது எங்களின் வீட்டை அவர் வாங்கினார். அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும் போது மெக்டெனால்டில், பணம் சம்பாதிப்பதற்காக பகுதி நேரமாக வேலை பார்த்தேன். அதனால் வாழ்வதற்காக அமெரிக்காவில் செலவிடப்படும் தொகை எவ்வளவு அதிகரித்துள்ளது என எனக்கு தெரியும்.

விலைவாசி உயர்வால் வாழ்வதற்கு அமெரிக்கர்கள் எவ்வளவு போராட்டங்களை சிரமங்களை சந்தித்து வருகிறார்கள் என்பது எனக்கு தெரியும். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதார பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தந்து, விலைவாசியை குறைப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் தன்னுடைய சிறு வயது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து இப்படி ஒரு போஸ்ட் போட்டுள்ளது அமெரிக்க மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரே போஸ்டால் கமலா ஹாரிசின் செல்வாக்கு அதிகரிக்க துவங்கி உள்ளது. மறுபக்கம், கமலா ஹாரிஸை தரம் தாழ்ந்து டிரம்ப் விமர்சித்து வருவது அவருக்கு பின்னடைவையும் ஏற்படுத்தி வருகிறது.
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
{{comments.comment}}