சென்னை: பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல என்று யூடியூபருக்கு பதில் தெரிவித்துள்ளார் நடிகை கவுரி கிஷன்.
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படத்தில் நடித்தவர் கவுரி கிஷன். இப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது யூடியூபர் கார்த்திக் சர்ச்சைக்குரிய வகையில், நடிகையின் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்வி கவுரி கிஷனை வெகுவாக பாதிக்க, மற்றொரு பேட்டியில் இது பற்றி பேசிய கவுரி கிஷன், ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார். நடிகை கவுரி கிஷனிடம் தவறான கேள்வி எழுப்பிய யூடியூப்ருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், நான் ஒரு விதத்தில் கேட்டேன். அவங்க ஒரு விதத்தில் ஸ்டுப்பிட் மாதிரி கேட்காதீங்கனு சொன்னாங்க. பதிலுக்கு அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்டேன். நான் அவங்கள உருவகேலி பண்ணல. ஜாலியா கேட்ட கேள்வி, தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அவங்க மனச நோகடிக்கனும் என்ற எண்ணம் எனக்கில்லை. இதனால் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தா அதுக்கு நானும் வருந்துகிறேன் என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை கவுரி கிஷன் வெளியிட்ட பதிவில், பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல. நான் ஜாலியாக கேட்டதை அவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள். நான் யாரையும் அவமதிக்கவில்லை என்று அதை நியாயப்படுத்த முயல்வது மிக மோசமான செயல். வெற்று வார்த்தைகளாகக் கேட்கும் மன்னிப்பை ஏற்க மாட்டேன் என பதவிட்டுள்ளார்.
அதிமுக கூட்டணி.. வருவதற்கு யோசிக்கும் தவெக விஜய்.. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்ன?
விஜய்க்கு என்ன பலம் உள்ளது? அவர் எப்படி தனியாக திமுகவை வீழ்த்துவார்?: வானதி சீனிவாசன் கேள்வி
Wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பச்சைப் பொய் பழனிசாமி.. திமுக ஆர்.எஸ். பாரதி தாக்கு
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை... அண்ணாமலை விமர்சனம்!
தமிழகத்தில் மழை தொடரும்... நாளை 3 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை.. அரசாங்கம் இருக்கிறதா?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!
துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!
திமுகவை வீழ்த்த நினைத்தால்.. நடிகர் விஜய் இதை செய்ய வேண்டும்.. தமாகா தலைவர் ஜி கே வாசன் யோசனை
{{comments.comment}}