பிரதமர் பதவியே கொடுத்தாலும் கூட.. பாஜக, ஆர்எஸ்எஸ்ஸில் சேர மாட்டேன்.. சித்தராமையா

Jan 31, 2023,03:58 PM IST
ராமநகரா, கர்நாடகா: எனக்கு பிரதமர் பதவியே கொடுப்பதாக கூறினாலும் கூட நான் ஆர்எஸ்எஸ்ஸிலோ, பாஜகவிலோ சேர மாட்டேன் என்று அதிரடியாக பேசியுள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா.



கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள மாகடியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசும்போது இப்படிக் கூறினார் சித்தராமையா. அவர் பேசுகையில், பாஜகவுக்கும் சரி, மதச் சார்பற்ற ஜனதாதளத்துக்கும் சரி கொள்கையோ, நல்ல பார்வையோ கிடையாது. பணத்துக்கா, பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் அவர்கள். கொள்கை இல்லாத கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பவர்கள் அவர்கள். யாருடன் வேண்டுமானாலும் இணையத் தயாராக இருப்பவர்கள் அவர்கள்.

குடியரசுத் தலைவர் பதவியே தருவதாக இருந்தாலும், பிரதமர் பதவியே தருவதாக கூறினாலும் நான் பாஜகவிலோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிலோ சேர மாட்டேன். எனது பிணம் கூட அவர்களின் அலுவலகத்திற்குப் போகாது.

என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்று கூறுகிறது பாஜக. சித்தராமுல்லா கான் என்று என்னைக் கூறுகிறார் பாஜகவின் சிடி ரவி. காந்திஜி உண்மையான இந்து. ஆனால் காந்தியைக் கொன்ற கோட்சேவை அவர்கள் வணங்குகின்றனர்.  அவர்களுக்கு ஏதாவது கண்ணியம் இருக்கிறதா.. இப்படிப்பட்டவர்களுடன் கை கோர்க்கும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு ஏதாவது யோக்கியதை இருக்கிறதா?

நான் முதல்வராக இருந்தபோது அனைவருக்கும் உணவு என்ற பாதுகாப்பைக் கொடுத்தேன். அன்னபாக்யா யோஜனா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தேன். ஆனால் அதை பாஜக அரசு தொடர்ந்ததா.. இல்லை. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தோம். 7 கிலோ இலவச அரிசி கொடுத்தோம். அதை பாஜக 5 கிலோவாக குறைத்து விட்டது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ இலவச அரிசி கொடுப்போம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித் தொகை வழங்குவோம். ஆனால் ஏதாவது ஒரு சாதனை இவர்களிடம் உள்ளதா.. இல்லை என்றார் சித்தராமையா.

சமீபத்திய செய்திகள்

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்