விமானப்படைக்கு 114 ரஃபேல் போர் விமானங்கள்.. ரூ. 3.25 லட்சம் கோடியில் மெகா ஒப்பந்தம்!

Feb 10, 2026,06:18 PM IST

டெல்லி: இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, பிரான்ஸ் நாட்டின் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பிரம்மாண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாரம் ஒப்புதல் அளிக்க உள்ளது. 


சுமார் ரூ. 3.25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாக அமையவுள்ளது.


புதிய ஒப்பந்தத்தின் கீழ், 100 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இது மேக் இன் இந்தியா  திட்டத்திற்கு வலுசேர்ப்பதுடன், உயர்தர போர் விமானத் தொழில்நுட்பம் இந்தியாவிற்கு கிடைக்கவும் வழிவகுக்கும்.




ஏற்கனவே விமானப்படையிடம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ள நிலையில், கடற்படைக்காக 26 எம் ரக ரஃபேல் விமானங்களை ரூ. 63,000 கோடி செலவில் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவை ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் நிலைநிறுத்தப்படும்.


பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் இந்தியாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இணைந்து ஹைதராபாத்தில் அதிநவீன உற்பத்தி நிலையத்தை அமைக்கவுள்ளன. இதற்கான முதல் பாகங்கள் 2028-ஆம் ஆண்டு வாக்கில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உலகின் மிக ஆபத்தான போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரஃபேல், வான்வழித் தாக்குதல் மற்றும் துல்லியமான இலக்குகளை அழிப்பதில் வல்லமை பெற்றது. 


இதில் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட SCALP ஏவுகணை, நீண்ட தூரம் சென்று வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் மெட்டியார் என்ற ஏவுகணை,  ஸ்பெக்ட்ரா தொழில்நுட்பம் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.  


இந்திய விமானப்படையின் வசம் ஏற்கனவே உள்ள ரஃபேல் விமானங்கள், கடந்த ஆண்டு நடந்த ராணுவ நடவடிக்கைகளிலும், லடாக் எல்லைப் பகுதிகளிலும் திறம்படச் செயல்பட்டுத் தங்கள் வலிமையை நிரூபித்துள்ளன.


இந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலம், பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே ரஃபேல் விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !

news

இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு

news

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: பாமக அன்புமணி தீவிர ஆலோசனை!

news

Heat Wave warning: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

news

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி...இணையத்தைக் கலக்கும் அதிரடித் தகவல்!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்