15 வருடமாக "சிக் லீவு".. ஊதிய உயர்வு தரவில்லை என்று கூறி கோர்ட்டுக்குப் போன ஊழியர்!

May 15, 2023,12:08 PM IST
கலிபோர்னியா: ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் கடந்த 15 வருடமாக உடல் நலம் சரியில்லாததால் லீவில் இருந்து வருகிறார்.  இந்த நிலையில் தனக்கு ஊதிய உயர்வு தரவில்லை என்று கூறி  அவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த ஊழியரின் பெயர் இயான் கிளிப்போர்ட். ஐபிஎம் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக இருக்கிறார். இவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் 2008ம் ஆண்டிலிருந்து சிக் லீவில் இருந்து வருகிறார் இயான் கிளிப்போர்ட். இந்த நிலையில் 2013ம் ஆண்டு முதல் இவர் மருத்துவ ரீதியாக உடல்நல பாதிப்பு காரணமாக பணியாற்றவில்லை. ஆனால் விடுமுறையை நீட்டித்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு உடல் நல பாதிப்பு இருப்பதைக் காரணம் காட்டி ஊதிய  உயர்வு மறுக்கப்படுவதாக ஐபிஎம் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இயான் கிளிப்போர்ட். தற்போது இயான் கிளிப்போர்டுக்கு வருடந்தோறும் 55 லட்சத்து 30 ஆயிரத்து 556 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை அவரது 65 வயது வரை தருவதாகவும் ஐபிஎம் நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஆனால் இது போதாது என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார் இயான் கிளிப்போர்ட்.

நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால் தன்னால் இந்த குறைந்த சம்பளத்தை வைத்து மீதக் காலத்தை ஓட்ட முடியாது என்பது கிளிப்போர்டின் வாதமாகும். 

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக இவர் விடுப்பில் போனார். பின்னர் விடுப்பை நீட்டிக்க ஆரம்பித்தார். இதையடுத்து இவரது உடல் நிலை குறித்து ஐபிஎம் நிறுவனம் ஆராய்ந்தது. அவரது நிலையை கருத்தில்கொண்டு பரிவுடன் ஒரு செயல்திட்டத்தை ஐபிஎம் முன் வைத்தது. அதன்படி உங்களை டிஸ்மிஸ் செய்ய மாட்டோம். அதேசமயம், உங்களுக்கு வருடந்தோறும் ஒரே ஊதியத்தைத் தருகிறோம். நீங்கள் வேலை செய்யாவிட்டாலும் அந்த ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறி அதை கிளிப்போர்டும் ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த ஊதியம் தற்போது தரப்பட்டு வருகிறது.

ஆனால் இப்போது இது தனக்குப் போதாது என்று கூறி சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார் இயான் கிளிப்போர்ட். உலகம் முழுவதும் ஆட்குறைப்பு தாறுமாறாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இயான் கிளிப்போர்ட் செய்யாத வேலைக்கு தரப்படும் சம்பளம் போதாது என்று கிளம்பியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்