திருவனந்தபுரம்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மக்கள் விரோத சிஏஏ சட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சிஏஏ சட்டம் மட்டுமல்லாது, விவசாய சட்டங்கள் உள்ளிட்ட பாஜக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து சர்ச்சைக்குரிய சட்டங்களும் மறு ஆய்வுக்குட்படுத்தப்படும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் இதுகுறித்துப் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பல சட்டங்களை மறு ஆய்வுக்குட்படுத்துவோம், திருத்துவோம், தேவையில்லாததை நீக்குவோம். பட்டியலில் சிஏஏ முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், கிரிமினல் நடைமுறைச் சட்டம் என எல்லாவற்றையும் மறு ஆய்வுக்கு உட்படுத்துவோம். குறிப்பாக கடைசியாக கொண்டு வரப்பட்ட ஐந்து கிரிமினல் நடைமுறைச் சட்டத்தையும் முழுமையாக நீக்குவோம். அவை அரசியல் சாசனத்திற்கு எதிரானவை. புதிய சட்டங்களைக் கொண்டு வருவோம். 25 சட்டங்களை திருத்தத் திட்டமிட்டுள்ளோம்.
தேவைப்பட்டால் மட்டுமே சிறையில் அடைக்கும் முறையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவோம். தேவையில்லாமல், விசாரணையே இல்லாமல், ஒருவரை நீண்ட காலமாக சிறையில் அடைத்திருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். Bail is the rule, jail is the exception என்று சொன்ன கேரள நீதிபதி கிருஷ்ணா சொன்னது போல இந்த சட்டம் கொண்டு வரப்படும். கீழ் நீதிமன்றங்களிலேயே இனிமேல் ஜாமீன் கிடைக்க வகை செய்யப்படும். கைது செய்யப்பட்ட அனைவருமே சிறைக்குப் போகத் தேவையில்லை. ஜாமீனுக்காக சுப்ரீம் கோர்ட் வரை போகத் தேவை இருக்காது. இன்று சிறையில் அடைக்கப்பட்டிருப்போரில் 65 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள்தான், தண்டிக்கப்பட்டவர்கள் அல்ல.
விசாரணைக் கைதிகளில் 90 சதவீதம் பேர் ஓபிசிக்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே இந்தக் கொடுமையை நீக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும். சிபிஐயோ அல்லது காவல்துறையோ யார் கைது செய்தாலும் சரி, கைது செய்யப்பட்டவர்கள் 15 நாட்களுக்கப் பிறகு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில், வயநாடு மக்கள் மீண்டும் ராகுல் காந்தியை பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள். தேர்தல் முடிவு வரும்போது வயநாடு மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களது அனுதாபங்களை உரத்த குரலில் பதிவு செய்வார்கள் என்றார் ப.சிதம்பரம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}