டெல்லி: இந்தியா கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் யாதவை வெளியேற விடாமல் தடுத்திருக்க வேண்டும். அதேபோல சந்திரபாபு நாயுடு மற்றும் மாயாவதியையும் இந்தியா கூட்டணியில் இணைத்திருக்க வேண்டும். இது மட்டும் நடந்திருந்தால் இப்போது ஆட்சி இந்தியா கூட்டணி வசம் மாறியிருக்கக் கூடும் என்று அரசியல் கணக்குகளைப் பார்த்தால் தெரிய வருகிறது.
லோக்சபா தேர்தலில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த 2 தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்து வந்த பாஜக இந்த முறை தனிப் பெரும்பான்மை பலத்தை தவற விட்டிருக்கிறது. அந்தக் கட்சிக்கு 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்குத் தேவையானது 272 ஆகும். கடந்த 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்றிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ஒரு தேர்தல் கணக்கு அதிர வைக்கும் விஷயத்தைச் சொல்கிறது. மாயாவதிதான் பாஜகவின் முகத்தை சற்று காப்பாற்றியிருக்கிறார் என்பதுதான் அது. மாயாவதியை, இந்தியா கூட்டணிக்குள் கொண்டு வர இந்தியா கூட்டணி மிகத் தீவிரமாக முயன்றது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி முயன்றது. ஆனால் மாயாவதி முதலில் ஆர்வம் காட்டினார், பின்னர் பின்வாங்கி விட்டார்.. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 79 இடங்களில் போட்டியிட்டு 9.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால் எந்த தொகுதியிலும் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கட்சி பிரித்த வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாகப் போயுள்ளன. அதாவது, பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டு வென்ற 16 தொகுதிகளில், வாக்கு வித்தியாசத்தை விட பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வாக்குகள் அதிகம். அதாவது இந்தியா கூட்டணிக்கு பகுஜன் சமாஜ் கட்சி போயிருந்தால் பாஜகவுக்கு குறைந்தது 16 சீட்டுகள் குறைந்திருக்கும்.
பகுஜன் சமாஜ் கட்சி அதிக வாக்குகளைப் பெற்ற அந்த 16 தொகுதிகள் இதுதான் - பன்சோகன், அம்ரோஹா, அலிகார், அக்பர்பூர், பதோஹி, பிஜ்னூர், தியோரியா, மீரட், ஹர்டோய், பதேபூர் சிக்ரி, பரூக்காபாத், மிஸ்ரிக், மிர்ஸாபூர், பூல்பூர், உன்னாவ், ஷாஜகான்பூர் ஆகியவையே. இதில் 14 தொகுதிகளில் பாஜகவும், கூட்டணிக் கட்சியான ஏடிஎஸ் 2ம் வென்றுள்ளன.
அதேபோல பரூக்காபாத், பூல்பூர், பன்சோகன் ஆகிய தொகுதிகளில் 5000க்கும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக கூட்டணி வென்றுள்ளது. மீரட் தொகுதியில் நடிகர் அருண் கோவில் வெறும் 10,583 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றுள்ளார். அந்தத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 87,025 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணிக்கு வந்திருந்தால், பாஜகவுக்கு மேலும் சில சீட்டுகள் குறைந்து அந்தக் கட்சிக்கு 224 சீட்டுகள் வரையே கிடைத்திருக்கும் என்பது புலனாகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் 277 சீட்டுகளே கிடைத்திருக்கும். ஆட்சி அமைவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கக் கூடும்.
இந்தியா கூட்டணி நிதீஷ் குமார், மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோரையும் உள்ளே இழுத்திருந்தால் அந்தக் கூட்டணிக்கு மெஜாரிட்டி கூட கிடைத்திருக்க வாய்ப்புண்டு என்று கணக்கிடப்படுகிறது. இந்த விஷயத்தை முன்கூட்டியே பாஜக உணர்ந்த காரணத்தால்தான் முதல் ஆளாக நிதீஷ் குமாரை உள்ளே இழுத்தது.. மாயாவதி எங்கும் போய் விடாமல் தடுத்தது.. நாயுடுவையும் தூக்கி உள்ளே போட்டுக் கொண்டது. இதைச் செய்ததால்தான் இப்போது மீண்டும் பாஜக ஆட்சியில் அமர முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால் இன்னேரம், இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு பெரும் சண்டை நடப்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்!
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}