சென்னை: ஒரு நடிகர் கட்சி தொடங்கி விட்டார். அந்த நடிகரின் பின்னால் இளைஞர்கள் ஆட்டு மந்தை போல் திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை என விஜய்யின் தவெக குறித்து மறைமுகமாக சாடியுள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
விழுப்புரத்தில் விசிக தேர்தல் அங்கீகார விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் ஊடகங்கள் ஒரு செய்தி எழுதுவார்கள். விஜயகாந்த் அவர்கள் கட்சி தொடங்கிய போது விடுதலை சிறுத்தைகள் தான் பலவீனப்படும் என்று கருத்து சொன்னவர்கள் உண்டு. இதனைப் பற்றி விவாதித்தவர்கள் உண்டு. ஆனால் விடுதலை சிறுத்தைகள் தனித்தன்மையோடு அதே வீரத்தோடு இந்த களத்தில் தொடர்ந்து நீடித்து நிற்கிறது என்பதுதான் வரலாறு. அப்போதே நான் சொன்னேன் யார் யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும் அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேதப்படுத்த முடியாது. இதற்கு காரணம் இந்த இயக்கத்தின் களம் முற்றிலும் புதியது. இந்த இயக்கத்தின் கொள்கை கோட்பாடு முற்றிலும் புதியது அந்த அடிப்படையில் தான் திருமாவளவனுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் இடையே பிணைப்பும் இருக்கிறது.
சினிமா கவர்ச்சியின் மூலமாக இந்த இளைஞர்களை எவராலும் திசைமாற்றி விட முடியாது. மடை மாற்றி விட முடியாது என்பதை அப்போதே நான் சொன்னேன். அது உண்மை என்பதை காலம் உணர்த்தி இருக்கிறது. இன்றைய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு மாபெரும் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதை சொல்கிறார்கள். நடிகர் ஒருவர் கட்சி தொடங்கி விட்டார். இந்த இளைஞர்கள் எல்லாம் அந்தப் பக்கம் ஆட்டுமந்தைகளை போல் திரும்புவார்கள். ஒரு நடிகரின் பின்னால் இளைஞர்கள் அப்படி திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட இளைஞர்களை வடிகட்டி வெளியேற்றுவது தான் கட்சிக்கு சிறப்பு.
புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, பகுத்தறிவு பகலவன் பெரியாரை ஏற்றுக்கொண்டு, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு கோட்பாட்டை வழங்கிய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களையும் புரிந்து கொண்டு திருமாவளவனோடு பயணிப்பவர்கள் தான் உண்மையான சிறுத்தைகளாக இருக்க முடியும். அவர்கள்தான் எனக்குத் தேவை. அவர்கள்தான் எப்போதும் என்னோடு பயணிக்க கூடியவர்கள். அவர்களை எந்த கொம்பனாலும் ஈர்க்க முடியாது. திசை மாற்ற முடியாது. மடை மாற்ற முடியாது.
இங்கே தலைவர்கள் சொன்னதைப் போல அரசியலுக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு பட்டாளத்தை அப்படியே கட்டுக்கோப்பாக வைத்திருக்கக் கூடிய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதே எழுச்சி..அதே உணர்ச்சி.. அதே வீரியம்.. அதே வேட்கை.. கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தொய்வும் இல்லை.. எந்த வீழ்ச்சியும் இல்லை..சரிவும் இல்லை என பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}