இல. கணேசன்.. ஜெயலலிதா முரண்டு பிடித்தபோது.. அப்படியே விட்டு விட்டு .. திமுகவைத் தூக்கியவர்!

Feb 13, 2023,10:19 AM IST
சென்னை: ஒரு காலத்தில் தமிழ்நாடு பாஜக தலைவராக வலம் வந்தவர் இல. கணேசன். அவரது காலத்தில்தான் தமிழ்நாட்டு மக்களிடையே சற்று தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது பாஜக. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாஜகவைக் காலை வாரியபோது, அலேக்காக திமுகவுடன் பாஜகவை கூட்டணி சேர வைத்ததில் இல. கணேசனின் பங்கு மிகப் பெரியது.



தமிழ்நாடு நாடு பாஜக தலைவர்களில் மிக முக்கியமானவர் இல. கணேசன். அவர் தலைவராவதற்கு முன்பு வரை இருந்தவர்கள், மேல்மட்ட அளவில்தான் அரசியல் செய்து வந்தனர். ஆனால் பாஜகவை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்ற பெருமைக்குரியவர் இல. கணேசன். இவரது தமிழ் பேச்சு அத்தனை சிறப்பாக இருக்கும். மறைந்த கருணாநிதிக்கு மிகவும் பிடித்த தலைவர். ஜெயலலிதாவுடனும் நெருங்கிய நட்பு வைத்திருந்தவர்.

தமிழ்நாட்டில் தாமரையை மலர வைப்போம் என்று பேசிய தமிழிசை செளந்தரராஜனுக்கு கிட்டத்தட்ட அரசியல் குரு இவர்தான். தீவிரமான ஆர்எஸ்எஸ்காரர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்த இல. கணேசனை தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் அனுப்பி வைத்தது. இதையடுத்து தமிழ்நாடு பாஜகவின் பொதுச் செயலாளராக 2003ம் ஆண்டு வரை இருந்தார். அதன் பின்னர் பாஜக தலைவரானார்.


தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பேசக் கூடிய திறமை படைத்தவர் இல. கணேசன். இவரது காலத்தில்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தனி மவுசு கிடைத்தது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க  இவர்தான் பெரும் முயற்சிகள் எடுத்தார். ஆனால் வாஜ்பாய் அரசு கவிழ ஜெயலலிதாவின் அதிரடி முடிவுகள் காரணமாக அமைய அதனால் பெரும் வருத்தமுற்றார் இல.கணேசன். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்குப் பதிலடி தரும் வகையில் அடுத்து வந்த தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து அதிர விட்டது.

அதேபோல சோ ராமசாமியுடன் இணைந்து பாமகவையும், பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் திமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்து மத்தியில் வாஜ்பாய் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இந்த முயற்சிகளுக்கு இல. கணேசன் முக்கியக் காரணமாக இருந்தார்.

இப்போது உள்ள அரசியல் தலைவர்கள் போல இல்லாமல், தனது காலத்தின் முக்கிய சக்திகளான ஜெயலலிதா, கருணாநிதி, இடது சாரித் தலைவர்கள் என அனைவருடனும் நல்ல நட்பையும், உறவையும் பேணியவர் இல.கணேசன்.  திமுக தலைவர்களின் வாய் ஜாலப் பேச்சுக்களுக்கு சற்றும் குறையாத தமிழ்ப் புலமை கொண்டவர் கணேசன்.

ஜாதியை வைத்து தமிழ்நாட்டு அரசியல் திகழ்ந்தாலும் கூட ஜாதி அரசியலை விரும்பாதவர் இல.கணேசன்.  மிகவும் எளிமையான மனிதரும் கூட. இத்தனை நல்ல விஷயங்கள் இவரிடம் இருந்ததால்தான் இவரது தலைமையில் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தனி அடையாளம் கிடைத்தது. அதன் பின்னர் ராஜ்யசபா எம்.பி. ஆனார். பிறகு மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது நாகாலாந்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.



சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்