சென்னை: காலை 10 மணி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நல்ல மழை காத்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக பகலிலும், இரவிலும் என மாறி மாறி மழை வெளுத்து வருகிறது. மாலையில் வலுவாக பெய்வதால் அலுவலகம் சென்று திரும்புவோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். அந்த அளவுக்கு மழை பெய்கிறது.

நேற்று இரவு முழுவதும் சென்னையில் விடிய விடிய பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரையிலான காலகட்டத்தில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே அலுவலகம் செல்வோர் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}