ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Jun 09, 2025,04:16 PM IST

சென்னை: தமிழகத்தில் ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 15ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தை பொருத்த வரை இன்றைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி,  அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




அதே போன்று,  நாளைய தினம் ஈரோடு, தருமபுரி, கிருஷ்கிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக, 11ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் அன்றைய தினம் கனமழைக்கான எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது.


13,14 மற்றும் 15ம் தேதிகளில்  நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த 3 நாட்களிலும் கனமழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மழை பகுதிகளுக்கும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வாவிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைதியா இரு

news

Short Story by Sudha Thirunarayanan: பை!

news

தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்