தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

Apr 02, 2025,06:24 PM IST

சென்னை: தற்போதைய அரசியல் சூழலில் பாஜக தலைவராக யார் இருந்தால் சரியாக இருக்கும் என்பது தொடர்பாக தென்தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில் தற்போதைய தலைவர் அண்ணாமலைக்கே அதிக ஆதரவு கிடைத்துள்ளது.


தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போதிலிருந்தே இத்தேர்தலை எதிர்நோக்கி ஒவ்வொரு கட்சிகளும் தனது கட்சி மேம்பாட்டு பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன. அதில் எதிர்க்கட்சியாக வலம் வரும் அதிமுக பரபரப்பாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. 


சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  அதிமுக அலுவலக கட்டத்தை கட்டிடத்தை பார்வையிடவே சென்றதாக கூறிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உரையாடி இருக்கிறார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகவுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் அதிமுகவோ  தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாத காலங்களுக்கு உள்ளன. அதனால் கூட்டணி குறித்து இப்போது அறிவிக்க முடியாது எனவும் கூறி வருகிறது. 




மறுபக்கம் அண்ணாமலையை நீக்க வேண்டும், அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும், எடப்பாடி பழனி்ச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அதிமுக தரப்பு அமித்ஷாவிடம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்தக் கோரிக்கைகளை பாஜக பரிசீலித்து வருகிறதாம். 


அதிமுக பாஜக கூட்டணி குறித்த செய்திகள் விறுவிறுப்பாக வெளிவரும் நிலையில், மறுபுறம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என அறிவித்திருந்தார். அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதையடுத்து சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.


அண்ணாமலைக்கு பதிலாக புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில், நைனார் நாகேந்திரன் முன்னிலை வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெயர்களும் அடிபடுகிறது.


இந்த நிலையில் நம்முடைய தென் தமிழ் வாசர்களிடம் ஒரு கேள்வியை கேட்டிருந்தோம்.  தற்போதைய சூழலில் பாஜகவின் தலைமை பொறுப்பில் யார் இருந்தால் சரியாக இருக்கும் என்ற ஒரு கேள்வியை முன் வைத்திருந்தோம். பதிலாக நான்கு ஆப்ஷன்களும் தரப்பட்டிருந்தன. 


இதில் அண்ணாமலைக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது அண்ணாமலை 69% சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார். நைனார் நாகேந்திரன் 14.3 சதவீதம் ஆதரவையும் மத்திய அமைச்சர் எல். முருகன் 7.1 சதவீத ஆதரவையும், வானதி சீனிவாசன் 9.5 சதவிகித ஆதரவையும் பெற்றுள்ளனர். அண்ணாமலைக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் களமாடி வரும் நிலையில் பாஜக மேலிட முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்