குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில், பேருந்து லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 14 பேர் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலம் கோலக்காட் மாவட்டம் டெர்கான் அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து, டின்சுகியா அருகே உள்ள திலிங்ககோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே ஒரு லாரி வந்தது.
திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது மோதியது. இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கயது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்து லாரி மோதிக்கொண்ட விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}