சென்னை: சென்னை உட்பட 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள், மாணவர்கள் பெண்களுக்கான பல திட்டங்கள் பாராட்டைப் பெற்றுள்ளது. அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு திமுக பல்வேறு யுத்திகளையும் கையாண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, 2025 -26 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிகள் நிரப்பப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி சமீபத்தில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி பெண்களை குஷிப்படுத்தி உள்ளது. அதேபோல் தற்போது தமிழ்நாட்டில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு மொத்தம் 3,274 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 364 விரைவு போக்குவரத்து கழகத்தில் (SETC)318, காலி பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. அதேபோல் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 322, கும்பகோணத்தில் போக்குவரத்து கழகத்தில் 756, சேலம் 506,கோயம்புத்தூரில் 344, மதுரையில் 302, திருநெல்வேலியில் 362, என மொத்தம் 3274 ஓட்டுநர், நடத்தினர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது நாளை (21.3.2025)மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் ஒரு மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2025 இன் படி 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உயரம் 160 சென்டிமீட்டர் குறைந்தபட்சமாக 50 கிலோ எடையும் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}