Kuthuvilakku: குத்துவிளக்கு எந்த திசையில் ஏற்றினால் வீட்டில் செல்வம் பெருகும் தெரியுமா ?

Dec 06, 2024,10:54 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் விளக்கு ஏற்று வைத்து துவங்குவது மங்களகரமான துவக்கத்தின் அடையாளமாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கின்றன. விளக்குகளில் எத்தனையோ விளக்கு இருந்தாலும் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றுவது நிறைவான, லட்சுமி கடாட்சத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த குத்துவிளக்கை எந்த திசையில் , எந்த முறையில் ஏற்ற வேண்டும்? எந்த திசை நோக்கி ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை காண்போம்.


குத்து விளக்கு பித்தளை, வெள்ளி ஆகிய உலோகங்களில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இப்போது மண் விளக்கிலும் குத்துவிளக்கு அமைப்பு விற்கப்படுகின்றது. பூஜை அறையில் அவரவர் வசதிக்கு ஏற்ப விளக்கு ஏற்றலாம். பித்தளை விளக்கு ஏற்றுவது விசேஷம். அதில் நல்லெண்ணெய் அல்லது பஞ்சகூட்டு எண்ணெய் எனப்படும் ஐந்து தீப எண்ணெய் ஊற்றி ஏற்றுவது சிறப்பு. நெய் தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமான பலன்களை தரும்.


குத்து விளக்கு ஏற்றும் திசைகளும், பலன்களும் :




கிழக்கு - குடும்ப அபிவிருத்தி, சகல நன்மை பெருகும், துன்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.

மேற்கு - கடன் தொல்லை மற்றும் தோஷம் நீங்கும்.

வடக்கு - குடும்பத்தில் உள்ள திருமணத்தடை அகலும்.

தெற்கு - இந்த திசையில் விளக்கு ஏற்றக் கூடாது.


குத்துவிளக்கு ஏற்றும் போது இரண்டு விளக்குகள் வைத்து ஏற்றுவது நன்மை உண்டாக்கும். குத்துவிளக்கு ஏற்றும் திசைக்கு மட்டுமல்ல அதில் ஏற்றப்படும் முகங்களுக்கும் தவித்தனியான பலன்கள் உண்டு. 


குத்துவிளக்கு முகங்களும், பலன்களும் :


ஒரு முகம் - நினைத்த காரியங்கள் நடக்கும்.

இரு முகம் - குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

மூன்று முகம் - புத்திரதோஷம் நீங்கும்.

நான்கு முகம் - பசு, பூமி, செல்வம், சர்வ பீடை நிவர்த்தி ஆகும்.

ஐந்து முகம் - சகல நன்மைகளும், ஐஸ்வர்யமும் பெருகும். 


விளக்கு ஏற்றும் போது கவனிக்க வேண்டியவை :


* பூஜை அறையில் விளக்கேற்றும் போது வீட்டின் முன் வாசற்கதவை திறந்து வைக்க வேண்டும். 

* பின் வாசற் கதவு இருந்தால் அந்த கதவை மூடி வைக்க வேண்டும்.

* முன் வாசல் வழியாக மகாலஷ்மி நம் வீட்டிற்குள் வருவதாக ஐதீகம். மஹாலஷ்மி நம் வீட்டினுள் வந்து தங்கி அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி கொடுப்பாள்.

* பூஜை அறையில் ஷட்கோண கோலமிட்டு அதன் மீது விளக்கேற்றுவது சிறப்பு.

* வீட்டில் உள்ள பெண்கள் காலை, மாலை இரு வேளையும் வீட்டில் விளக்கேற்றுவது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்