ஹைதராபாத்: உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக முறை கேப்டனாக இருந்த பெருமை முகம்மது அஸாருதீனுக்கு மட்டுமே உள்ளது. இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான கபில் தேவுக்குக் கூட அந்தப் பெருமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1975 மற்றும் 1979 ஆகிய இரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா பெரிய சக்தியாக இல்லை. ஆனால் 1983ம் ஆண்டுதான் தனது பலத்தை முழுமையாக வெளி உலகுகக்கு காட்டியது. எப்புர்ரா.. என்று பலரும் வியந்து பார்த்தது அந்த உலகக் கோப்பைத் தொடரில்தான். அந்த மாஜிக்கை நிகழ்த்திக் காட்டிது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி.
உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 8 இந்திய கேப்டன்கள் இந்தியாவை வழி நடத்திச் சென்றுள்ளனர். அதுகுறித்த ஒரு பார்வை.

1975 மற்றும் 1979ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களுக்கு கேப்டனாக இருந்தவர் ஸ்பின் புயல் ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன். இந்த இரு தொடர்களிலும் இந்தியா பெரிதாக சோபிக்கவில்லை.
1983ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் கபில்தேவ் கேப்டனாக இருந்தார். இந்த தொடரில்தான் இந்தியா அதிரடியாக கோப்பையைக் கைப்பற்றி கிரிக்கெட் உலகையும், அப்போதைய ஜாம்பவானான மேற்கு இந்தியத் தீவுகளையும் அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து 1987ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரிலும் கபில்தேவே கேப்டனாக இருந்தார். 1987ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு வந்து சேர்ந்தார் முகம்மது அஸாருதீன். இந்திய அணிக்கு அதிக அளவிலான வெற்றிகளைத் தேடிக் கொடுத்த அட்டகாசமான கேப்டன் அஸாருதீன்தான். இவர் 1992, 1996 மற்றும் 1999 ஆகிய மூன்று உலகக் கோப்பைத் தொடர்களுக்கு கேப்டனாக இருந்தவர். ஆனால் இவரது காலத்தில் ஒருமுறை கூட இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
2003ம் ஆண்டு கங்குலி கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இந்திய அணி அதிரடியாக ஆடி இறுதிப் போட்டி வரை முன்னேறிச் சென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் சச்சின் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் சொதப்பியதால் பரிதாபமான தோல்வியே நமக்குக் கிடைத்தது.

2007 தொடரில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார். இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியா தவறி விட்டது.
டிராவிடுக்குப் பிறகு கேப்டன் ஆனார் எம்.எஸ். தோனி. இவரது காலத்தில்தான் இந்திய அணி ஏகப்பட்ட வெற்றிகளைக் குவித்தது. தோனி கேப்டனாக இருந்த காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அனைத்து ஐசிசி சாம்பியன் பட்டங்களையும் வென்று அசகாய சாதனை படைத்தது தோனி அணி. இதன் உச்சமாக 2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் ஆகி அசத்தியது. இது இந்தியாவுக்குக் கிடைத்த 2வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையாகும். 2015 தொடரிலும் தோனியே கேப்டனாக இருந்தார்.
2019ம் ஆண்டு நடந்த தொடரில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். வீரராக ஜொலித்த அளவுக்கு கேப்டனாக விராட் கோலியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
தற்போதைய தொடரில் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு அதிர்ஷ்டமும், அருமையான அணியும் பக்க பலமாக உள்ளனர். கபில் தேவ், தோனிக்குக் கிடைத்த பெருமை.. ரோஹித் சர்மாவுக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
@@இந்த மாதிரி நேரத்துல "விராட் கோலிகள்" சொல்ற வார்த்தை என்ன தெரியுமா.. "பார்த்துக்கலாம்"!
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}