தொடர் விடுமுறை.. விமான கட்டணம் 2 மடங்கு உயர்வு.. எப்படி ஊருக்குப் போறது.. அதிர்ச்சியில் பயணிகள்!

Aug 14, 2024,05:30 PM IST

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக,  சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளி அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறையினை பயன்படுத்தி, வெளியூர்களில் பணி புரிந்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 


இதனால், ரயில், பேருந்துகளில் மட்டும் கூட்டம் அதிகரிக்கவில்லை. விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கூடியுள்ளது. இதனால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் போட்டி போட்டு கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். பேருந்து, ரயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிக நேரம் ஆகும் என்பதால் பயணிகள் பலர் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டு வருகின்றனர். இதனால், விமான டிக்கெட்டின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.




சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி,கோவை, சேலத்திற்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதினால், விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் டிக்கெட் விலை தற்பொழுது இரு மடங்காக அதிகரித்துள்ளது. 


சென்னை டூ தூத்துக்குடிக்கு ரூ.4,301 ஆக இருந்த விமான கட்டணம் இன்றும், நாளையும் ரூ.10,796 ஆக உயர்ந்துள்ளது.


சென்னை டூ மதுரைக்கு ரூ.4063ஆக இருந்த விமான கட்டணம், இன்றும், நாளையும் ரூ.11,716 ஆக அதிகரித்துள்ளது.


சென்னை டூ திருச்சிக்கு ரூ.7192 ஆகவும், சென்னை டூ கோவை விமான கட்டணம் ரூ.5,349 ஆகவும் அதிகரித்துள்ளது.


இது மட்டும் இன்றி சென்னையில் இருந்து டில்லி, மும்பை, ஆமதாபாத் செல்லும் விமான டிக்கெட்டுகளின் விலையும் தற்பொழுது கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பேசாம மாட்டு வண்டியை எடுத்துட்டு அப்படியே ஜாலியா ஊரெல்லாம் வேடிக்கை பார்த்துட்டே போகலாம் போலயே!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்