- கவிஞர் சு. சண்முகம் (சொகோ), புதுப்பேட்டை
சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
சுகமாய் சுற்றித் திரிவோரே!
இன்று மட்டுமாயின் சற்று
இன்னலில் அடிபட்டு மாண்டோரை
ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

ஓராயிரம் மறியல்கள் போராட்டங்கள்
அருகிலுள்ள முதியோர் என்பது
அகவை கடந்தோரை இன்றேனும்
சந்தித்து அனுபவித்த இடர்களை
சற்றேனும் செவிமடுப்பீர்! அறிவீர்!
வாய்கிழிய பேசும் வாலிபர்களே!
வாய்மூடி ஊமையாக்கப்பட்ட முன்னோர்
அணுகியே அனுசரணையாய் ஓரிரு
அசைபோடு நினைவில் இளைப்பாருங்கள்
சட்டம்பேசும் சண்டியரே!
சுதந்திரச் சந்தேகங்களை நூலகத்தில் தேடிடுவீர்!
அணைத்தே அன்றாடம் உறங்கிடும்
அலைபேசியிலேனும் அறிந்திட விழைவீர்!
இளைஞர், இளைஞிகளே! மகிழ்வுருநாளின்று
இந்நாளை தொலைத்திடாது இருக்கவே!
ஆழ்ந்தறிவீர்! நற்செயல் செய்வீர்!
ஆனந்தவாழ்வுக்கு வழிவகை தேடுவீர்!
அடிமைச்சங்கிலி உடைத்தெறிய உத்வேகமாய்
ஆங்கிலேயர் அதிர்ந்திடவே! பயந்திடவே!
தோள் நிமிர்த்தோரை இந்நாளில்
தொழுது வணங்கியே போற்றிடுவோம்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}