- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடத் தயாராகி வருகிறது இந்தியா.
1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது. இந்தியாவின் அரசியல் சாசனத்தை நினைவு கூறும் ஒரு தேசிய தினம்தான் இந்த குடியரசு தினம்.
ஆகஸ்ட் 15 1947-ல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறினாலும் ஜனவரி 26 1950 அன்று அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் அது தன்னை இறையாண்மை, ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக அறிவித்தது. டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய, இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள்தான் ஜனவரி 26 1950.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களிடமிருந்து பூர்ண ஸ்வராஜ் அறிவித்தது அதாவது பூரண விடுதலையை அறிவித்தது. எனவேதான் இந்த தினத்தையே நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று 76 ஆவது குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருட குடியரசு தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க இந்தோனேசியா குடியரசுத் தலைவர் பிரபோவோ சுபி யாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
புதுடெல்லியில் உள்ள கர்த்தவ்ய பாதை என்ற இடத்தில் இதற்கான அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியம் ராணுவ வலிமை இவற்றை உணர்த்தும் விதமாக பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். நமது பாரம்பரியம், பலம் உள்ளிட்டவற்றை உலக நாடுகள் கண்டு வியக்கும் நாளாகவும் இது அமையும்.
இந்த ஆண்டு 2025 குடியரசு தினத்தின் கருப்பொருள் தீம் என்னவென்றால 'ஸ்வர்னிம் பாரத் 'Swarnim Bharath - 'விராசத் அவர் விகாஸ்'. ( அதாவது தங்க இந்தியா பாரம்பரியம் மற்றும் மேம்பாடு), இது நம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் தொடர்ச்சியான முன்னேற்ற பயணத்தையும் பிரதிபலிக்கிறது.
குடியரசு தினத்தில் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் தேசிய துறை நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துவோம். அவர்கள் மட்டுமல்லாமல் நமது வீடுகளிலும் கூட தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி நமக்காக ரத்தம் சிந்தி விடுதலை வாங்கிக் கொடுத்த தியாகச் செம்மல்களை நினைவு கூருவோம்.
ஜெய்ஹிந்த்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!
ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு
பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
{{comments.comment}}