"சந்திரன் ஒரு கண்ணில்.. சூரியன் மறு கண்ணில்".. செப். 2ல் சீறிப் பாய்கிறது ஆதித்யா!

Aug 26, 2023,04:33 PM IST
பெங்களூரு: சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக்கியுள்ள இஸ்ரோ, அடுத்து சூரினை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளுக்கு மிகப் பெரிய உற்சாகமாக வந்து சேர்ந்துள்ளது சந்திரயான் 3 திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. பூமி அல்லாத இன்னொரு கிரகத்தில் இந்தியாவின் காலடி சந்திரனில் பட்டுள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்.



இந்த சாதனையால் உற்சாகமடைந்துள்ள இந்திய விஞ்ஞானிகள் இன்னொரு வான வேடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர். அது தான் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலத் திட்டம். செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.  இது சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்யும். மேலும் சூரியப் புயல்களையும் இது ஆய்வு செய்து தகவல் அனுப்பும்.

பூமியிலிருந்து 10 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது. இதுவரை நாம் சூரிய ஆய்வில் ஈடுபட்டதில்லை. இதுதான் முதல் முறையாகும். சூரியனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதே ஆதித்யா விண்கலத்தின் முக்கிய நோக்கமாகும்.  சூரியனின் வெளிப்புறத்தில் 7 விதமான பகுதிகலை இந்த விண்கலம் ஆய்வு செய்யும். அதற்கேற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதித்யா விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்  இந்தியாவின் முன்னணி  நிறுவனங்கள் பல கை கோர்த்துள்ளன என்பது முக்கியமானது. பெங்களூரைச் சேர்ந்த இந்திய விண்வெளி இயற்பியல் கழகம் இதில் முக்கியமானது.  பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக் கோள் மையத்திலிருந்து ஆதித்யா விண்கலமானது, 2 வாரங்களுக்கு முன்பு இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்