அனைவருக்கும் சுகாதாரம்.. 1.50 லட்சம் நல்வாழ்வு மையங்களைத் தாண்டி அதிரடி சாதனை!

Dec 31, 2022,10:58 PM IST

டெல்லி: அனைவருக்கும் சுகாதார வசதி என்பதை நோக்கிய பயணத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கடந்துள்ளது - 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை அமைத்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையில், இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தாண்டியுள்ளது- 150,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் செயல்படுத்தப்பட்டுள்ளன.  நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனையை நிறைவேற்றிய  தேசத்தின் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார், மேலும் இந்த மையங்கள் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் ஆரம்ப சுகாதார வசதிகளை எளிதாக அணுகவும் பெறவும் உதவும் என்று அவர் கூறினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசத்தின் இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா தான் நினைத்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதற்காகத்  தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு முயற்சிகள், பிரதமர்  நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கி,  உறுதி செய்யப்பட்ட, விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய மாதிரியாக இந்தியாவை உருவாக்கியுள்ளது.

நாடு முழுவதும் 134 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களால் பயனடைந்துள்ளனர்.  மேலும் 86.90 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் தொற்றாத நோய்களுக்காக ஒட்டுமொத்தமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில்  29.95 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்திற்கும், 25.56 கோடி நீரிழிவு நோய்க்கும், 17.44 கோடி பேர் புற்றுநோய்க்கும், 17.44 கோடி பேர் மார்பகப் புற்றுநோய்க்கும், 5.66 கோடி பேர் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

இதுநாள்வரை, இந்த மையங்களில் 1.60 கோடிக்கும் அதிகமான நல்வாழ்வு  அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், 15,000 முதல் 20,000 மக்கள்தொகையை உள்ளடக்கிய நகர்ப்புறத்தில் 2-3 மையங்களை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் என்ற குடையின் கீழ் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் செயல்படுத்தி, புறநோயாளி  பராமரிப்பை வலுப்படுத்துகிறது



சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்