டெல்லி: இந்தியாவில் போர் பதற்ற சூழல் நிலவி வரும் நிலையில், வரும் 15-ம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
காஷ்மீர் அருகே உள்ள அழகிய பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ உடை அணிந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் அரசை எச்சரிக்கும் விதமாக இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் முகாமிட்டிருந்த 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் ராணுவம் பதான்கோட், பதம்பூர், ஜம்மு உள்ளிட்ட இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து இந்திய ராணுவம் அதனை முறியடித்தது.
அதே சமயத்தில் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளையும் இடைமறிந்து அழித்தது. இதனால் அப்பகுதிகளில் போர்ப்பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இன்று அதிகாலை 5 மணி அளவில் பஞ்சாப் அமிர்தசரத்தில் உள்ள காசா கான்ட் என்கிற இடத்தில் பாகிஸ்தானின் ட்ரோன் கண்டறியப்பட்டு உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிரிகளின் சதித் திட்டங்களை ராணுவம் நிச்சயம் முறியடிக்கும் என இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் போர் பதற்றம் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 15-ம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட்,லே, ஜோத்பூர், பூஜ், முந்த்ரா, ஜன்மகர், ஹிராசர், போர்பந்தர், கேஷோத்,காண்ட்லா, பிகானர், ஹல்வாரா, ஜெய்சால்மர்,
பூந்தர், கிஷன்கர், பாட்டியாலா,சிம்லா, லூதியானா, உள்ளிட்ட 32 விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}