Rain rain come again.. மே மாதத்தில் இந்தியாவில் மழை அளவு 125 சதவீதம் அதிகரிப்பு!

Jun 04, 2025,05:28 PM IST

டெல்லி:  மே மாதத்தில், டெல்லி மற்றும் இந்தியாவின் பல பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை, மேகமூட்டம் மற்றும் குளிர் காற்றுடன் காணப்பட்டன. வழக்கமாக வெப்ப அலைகளால் அவதிப்படும் மக்கள், இந்த முறை குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான காலநிலையை அனுபவித்தனர். 


இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 2025 இல்,  1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகபட்சமாக 126.7 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வந்ததும், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளும், மே மாதம் முழுவதும் நீடித்த மேற்கத்திய இடையூறுகளுமே இந்த அசாதாரண வானிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


இந்த எதிர்பாராத வானிலை நாடு முழுவதும் பரவலான மழையைக் கொண்டு வந்தது. 1053 இடங்களில் கனமழை (64.5–115.5 மிமீ), 262 இடங்களில் மிக கனமழை (115.6–204.5 மிமீ), மற்றும் 39 இடங்களில் மிக அதிக கனமழை (204.5 மிமீக்கு மேல்) பதிவாகியுள்ளது.




கடந்த ஐந்து ஆண்டுகளில் 2021 தவிர, இதுவே அதிகபட்ச புள்ளிவிவரமாகும். டெல்லியில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.08 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது ஏழாவது குளிரான மே மாதமாக அமைந்தது. இரவுகளும் வழக்கத்திற்கு மாறாக குளிராக இருந்தன, மே 2025 வரலாற்றில் 59வது குளிரான மாதமாக  மே மாதம் பதிவாகியுள்ளது.


வழக்கமாக, மேற்கத்திய இடையூறுகள் குளிர்காலத்தில் (டிசம்பர்-பிப்ரவரி) வட இந்தியாவை பாதிக்கும். இருப்பினும், இந்த ஆண்டு அவை மே மாத இறுதி வரை தீவிரமாக இருந்தன, இதனால் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்தது.


இந்த நூற்றாண்டின் குளிரான மே மாதம் 1917 இல் பதிவானது, அப்போது சராசரி அதிகபட்ச வெப்பநிலை 33.09 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதன்பிறகு, 1933, 1920, 1971, 1977 மற்றும் சமீபத்தில் 2021 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற குளிர்ச்சியான மே மாதங்கள் பதிவாகியுள்ளன.


சராசரி அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருந்ததால், மே 2025 இப்போது இந்த அரிதான குளிர்ச்சியான மாதங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு மே 2025 இல் பதிவான மழை அளவு ஒரு புதிய சாதனையாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்

news

உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!

news

ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?

news

பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

news

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்