இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி.. நிச்சயம் டெல்லி ஜும்மா மசூதி இல்லை.. வேற எது?

Dec 31, 2022,08:55 PM IST
டெல்லி: இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி டெல்லியில் உள்ள ஜும்மா மஸ்ஜித் என்று பலரும் கருதுகிறார்கள். ஏன் டெல்லி சுற்றுலாத்துறை இணையதளத்திலேயே கூட அப்படித்தான் உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல.

வரலாற்று அறிஞர்கள் கூற்றுப்படி, மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள தாஜ் உல் மஸ்ஜித் தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதியாகும். 

இந்தியாவில் மிக மிக பழமையான பல மசூதிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் டெல்லி ஜும்மா மசூதி. இது 1656ம் ஆண்டு முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டதாகும்.  அதேசமயம், போபாலில் உள்ள தாஜ் உல் மஸ்ஜித் மசூதியானது 1868 ம் ஆண்டில் தொடங்கி 1901ம் ஆண்டு வாக்கில் பாதி கட்டி முடிக்கப்பட்டது. இதை கட்டியவர் போபாலை அப்போது ஆண்டு வந்த ராணி ஷாஜகான் பேகம் ஆவார். இவர் போபாலின் மூன்றாவது ராணி ஆவார்.  தாஜ் உல் மஸ்ஜித் என்றால் மசூதிகளின் மகுடம் என்று பொருளாகும். ஷாஜகான் பேகம் மறைவுக்குப் பின்னர் பல வருடம் கழித்து 1971ம் ஆண்டு இந்த மசூதியை முழுமையாக கட்டி முடிக்கும் முயற்சிகள் முஸ்லீம்களால் கையெடுக்கப்பட்டு, 1985ம் ஆண்டுதான் இது முழுமை பெற்றது. 


இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் சோஹைல் ஹஷ்மி கூறுகையில், டெல்லி ஜும்மா மசூதி இந்தியாவின் மிகப் பெரிய மசூதி கிடையாது. மாறாக போபாலில் உள்ள தாஜ் உல் மசூதிதான் மிகப் பெரியது. டெல்லியை விட 33 சதவீதம் பெரிய மசூதியாகும் இது. 

ஜும்மா மசூதியானது அளவில் பெரிது கிடையாது, மாறாக, முகலாய கட்டடக் கலையின் பிரமாண்டத்திற்கு அது மிகச் சிறந்த உதாரணம் என்று கூறலாம்.  இந்த கட்டடத்தின் எழிலைப் பார்த்து பலரும் இதே போல கட்ட ஆர்வம் காட்டினர். லாகூரில் அவுரங்கசீப் கட்டிய பாதாஷி மசூதியும் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றார் அவர்.

அதேசமயம், ஒட்டுமொத்தமாக எது பெரிய மசூதி என்று பார்த்தால் லாகூர் மசூதிதான் உலகிலேயே மிகப் பெரியது என்றும் வரலாற்று நிபுணர்கள் சொல்கிறார்கள். கட்டுமானப் பகுதி மற்றும் திறந்த வெளிப் பகுதி ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்தால் பாதாஷி மசூதிதான் உலகிலேயே மிகப் பெரியது என்பது அவர்களின் கூற்றாகும்.

இருப்பினும் இதுதொடர்பாக எந்த பதிவு செய்யப்பட்ட ஆவணமும் இல்லை.  தாஜ் உல் மஸ்ஜித்தில் ஒரே சமயத்தில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் தொழுகை நடத்த முடியுமாம்.  Britannica.com கூறியுள்ள தகவலின்படி, ஜும்மா மசூதியில் 25,000 பேர் அமர்ந்து தொழுகை நடத்த முடியுமாம்.

Image: PTI

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்