டெல்லி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்னி ரக ஏவுகணை ஒன்றை ஏவிப் பரிசோதித்துள்ளது இந்தியா. இன்று அக்னி 5 எம்ஐஆர்வி ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கடந்த 10 வருடமாக மத்திய அரசின் டிஆர்டிஓ அமைப்பு இந்த ஏவுகணையை உருவாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை சோதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், "மிஷன் திவ்யாஸ்திரா" திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வரும் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

அக்னி 5 ஏவுகணையானது, Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) technology என்ற புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே ஏவுகணையில் பல்வேறு விதமான (அணு ஆயுதம் உள்ளிட்ட) ஆயுதங்களைப் பொருத்தி பல்வேறு இலக்குகளைத் தாக்க முடியும். சிம்பிளாக சொல்வதானால்.. ஒரே ஏவுகணையை வைத்து எதிரிகளின் பல இலக்குகளை எளிதாக காக்க முடியும்.
இன்னொரு விஷயம், இந்தியா உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பத்தில் முழுக்க முழுக்க நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட சென்சார் உள்ளிட்ட சாதனங்களே பொருத்தப்பட்டுள்ளன என்பது முக்கியமானது. இன்றைய சோதனை திட்டமிட்டபடி இருந்ததாகவும், இது வெற்றி பெற்றதாகவும் டிஆர்டிஓ அறிவித்துள்ளது.
யார் யாரிடம் இந்த தொழில்நுட்பம் உள்ளது?

இப்படிப்பட்ட ஏவுகணைகள் மிகச் சொற்பமான நாடுகளிடம்தான் உள்ளன என்பது முக்கியமானது. குறிப்பாக நம்முடைய பிராந்தியத்தில் சீனாவிடம் மட்டும்தான் உள்ளது. பாகிஸ்தானிடம் கிடையாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சிடம் அவர்களது நீர்மூழ்கி மூலம் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளில் இந்த தொழில்நுட்பம் உள்ளது.
சீனாவிடம், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. ரஷ்யாவிடம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகள் என இரண்டு வகை ஏவுகணைகளிலும் இந்த வசதி உள்ளது.
பாகிஸ்தான் இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பரிசோதித்து வருவதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}