டெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் ரூ. 63,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி, பிரான்சிடமிருந்து 26 ரபேல் எம் ரக போர் விமானங்களை (கடற்படையில் பயன்படுத்தக் கூடியது) இந்தியா வாங்கவுள்ளது.
கையெழுத்திடப்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தில் 22 ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களும், நான்கு இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களும் அடங்கும். இவை 2031 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்
ரஃபேல் எம் உலகளவில் மிகவும் மேம்பட்ட கடற்படை போர் விமானங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. தற்போது பிரெஞ்சு கடற்படை மட்டுமே இந்த ஜெட் விமானத்தை கொண்டுள்ளது.
இந்திய கடற்படையின் புதிய விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இந்த புதிய ரபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படும். இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல் வல்லாதிகத்தை வலுப்படுத்துவதோடு, எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் உதவும்.
தற்போது இந்தியாவிடம் உள்ள மிக் 29 கே விமானங்களுக்கு மாற்றாக ரபேல் போர் விமானங்கள் இடம் பெறவுள்ளன. இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை வைத்துள்ளது. தற்போது கடற்படைக்கான ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}