74வது குடியரசு தினம்..  டெல்லியில் நாளை கோலாகல அணிவகுப்பு.. இன்று குடியரசுத் தலைவர் உரை!

Jan 25, 2023,11:44 AM IST
டெல்லி: இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் நாளை பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறவுள்ளது. முன்னதாக இன்று இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.



குடியரசு தின விழாவையொட்டி இன்று இரவு 7 மணிக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். அவரது உரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். அதன் பின்னர் அவரது உரை, அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

சிறப்பு ஏற்பாடுகள்

குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமாண்ட அணிவகுப்பு இந்த ஆண்டும் கோலகாலமாக நடைபெறும். பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இதில் கலந்து கொள்ளவுள்ளன. முப்படையினரின் அணிவகுப்பும் இடம் பெறும். இந்தியாவின் ராணுவ பலத்தை பறை சாற்றும் வகையிலான அணிவகுப்பும் நடைபெறும். கலாச்சார நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி கலந்து கொள்கிறார். அவருடன் 5 அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவும் வருகிறது. இந்தியா - எகிப்து இடையிலான தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து நாட்டு ராணுவத்தின் பிரிவும் கலந்து கொள்வது முக்கிய அம்சமாகும். மொத்தம் 144 பேர் கொண்ட எகிப்து ராணுவம் இந்த அணிவகுப்பில் பங்கேற்கிறது. 

பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீஸார் மேற்கொண்டுள்ளனர். செங்கோட்டை, விஜய் சவுக், இந்தியா கேட் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளிலும் பல மட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணிவகுப்பு  தொடங்கும் விஜய் சவுக் முதல் முடிவடையும் செங்கோட்டை மைதானம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பைக் காண 60,000 மக்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட்டில் குடியரசு தின விழா காலை 9.30 மணிக்கு தொடங்கும்

911 பேருக்கு விருதுகள், பதக்கங்கள்

இதற்கிடையே, குடியரசு தின விழாவையொட்டி 911 போலீஸாருக்கு விருதுகளும், பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில போலீஸாருக்கு இவை வழங்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்