மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் நடந்து வந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. கடைசி நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒற்றை ஆளாக கடுமையாக போராடினார். ஆனால் அவரது போராட்டம் பலன் தரவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றிருந்தன. 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் மெல்போர்னில் 4வது போட்டி நடந்து வந்தது.

இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து தனது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 474 ரன்களைக் குவித்து விட்டது. அதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 369 ரன்களுக்கு இழந்தது. அதன் பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களி்ல் ஆட்டமிழந்தது.
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது. குறிப்பாக முன்னணி வீரர்கள் சொதப்பித் தள்ளி விட்டனர். கேப்டன் ரோஹித் சர்மா சுத்தமாக பார்மிலேயே இல்லை. மீண்டும் சிங்கிள் டிஜிட்டில் அவர் ஆட்டமிழந்தார். அதேபோல கே.எல். ராகுல், விராட் கோலி ஆகியோரும் பொறுப்பின்றி அவுட்டானார்கள்.
இன்று கடைசி நாளில் இந்தியா தனது வீரப் போராட்டத்தில் குதித்தது. இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனி ஆளாக ரன் குவிக்கப் போராடினார். 84 ரன்களை எடுத்து ஆடிக் கொண்டிருந்தபோது சர்ச்சைக்கிடமான முறையில் அவர் அவுட்டாக்கப்பட்டார்.
நடுக்கள வீரர்கள் நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ண முடியாததால் இறுதியில் இந்தியா 155 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
ஆஸ்திரேலியா அணியில் நதான் லயான் 4 விக்கெட்களைச் சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றால் இந்தத் தொடரை சமன் செய்ய முடியும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா வென்று விடும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}