சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்களுக்கு பிரமாண்டத் திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியைக் கண்டு களிக்க ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போட்டியை கண்டு களிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயில் நிலையங்களில் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல ஊர்களில் பொது இடங்களில் பிரமாண்டத் திரை கட்டி அதில் போட்டியை ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சென்னையில் சூப்பரான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதைக்கு அருகே 28 அடி அகலம் 10 அடி உயரத்தில் பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
இந்த இடத்திற்கு அருகே மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் போட்டியைக் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக டாய்லெட் வாகனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போட்டியைக் கண்டு களிக்க மாநகராட்சி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
தற்போது கடல் காற்று அதிகம் வீசுவதால் திரைக்குப் பாதிப்பு வருமா என்ற அச்சம் உள்ளது. இருப்பினும் பலத்த காற்றுக்கும் கிழிந்து விடாத வகையில்தான் திரை அமைக்கப்படுகிறது. எனவே போட்டியை முழுமையாக கண்டு ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது
தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு... 10 பேர் பட்டியல்.. 3வது இடத்தில் கே.ஏ.செங்கோட்டையன்!
விஜய்யால் தான் கரூர் சம்பவம் நடந்தது...டி.கே.எஸ். இளங்கோவன் கடும் விமர்சனம்
பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
{{comments.comment}}