டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள ஊடுறுவி, தீவிரவாத செயல்களைச் செய்து விட்டு தப்ப நினைத்தால் அவர்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சிஎன்என் நியூஸ் 18 சானலுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு கூறியுள்ளார் ராஜ்நாத் சிங். இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப யார் நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். பாகிஸ்தானுக்குள் அவர்கள் ஓடித் தப்ப நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம்.. உள்ளே புகுந்து அவர்களைக் கொல்வோம்.

அண்டை நாடுகளுடன் எப்போதும் நல்லுறவை வளர்த்துக் கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யாராவது தேவையில்லாமல் நம்மை சீண்டினால் நாமும் சும்மா இருக்க முடிாது. இந்தியாவுக்குள் புகுந்து தீவிரவாத செயல்களை செய்து விட்டு தப்பிப் போய் விடலாம் என்று நினைத்தால் நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம் என்றார் அவர்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிய சமயத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குத் நடத்தியதில் இந்திய வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}