லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா கடைசி நிமிடத்தில் அட்டகாசமான வெற்றியைத் தட்டிப் பறித்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வந்தது. இதில் தோற்றால் தொடரை இழக்க வேண்டி வரும், டிரா செய்தாலும் தொடரை இழப்போம் என்ற நிலையில் இந்தியா இருந்தது. வென்றால் தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் இந்திய வீரர்களும் சரி ரசிகர்களும் சரி திக் திக் பதட்டத்துடன்தான் டெஸ்ட் தொடரை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில், கடைசி நேரத்தில் இந்தியா வெற்றியை தட்டிப் பறித்து ரசிகர்களுக்கு குஷியைக் கொடுத்து விட்டது. இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா. இதன் மூலம் ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது.
இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் இருவரும் சதமடித்தும் கூட, இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னால் அவர்களது முயற்சி பலனற்றுப் போனது. 123 ஆண்டுகளில் ஓவல் மைதானத்தில் அதிகபட்ச ரன் சேஸிங்கைச் செய்ய இங்கிலாந்து எடுத்த முயற்சி, ஐந்தாம் நாள் முதல் பகுதியிலேயே தோல்வியடைந்தது.
இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ். முகமது சிராஜ் ஒரு மணி நேரத்திற்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது டெஸ்ட் வாழ்க்கையின் 5வது ஐந்து விக்கெட் வீழ்த்தலைப் பதிவு செய்து, இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.
முன்னதாக, இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், முந்தைய நாள் ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஓவர்டன் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் இன்னிங்ஸின் போது தோள்பட்டை காயம் காரணமாக டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டிருந்த கிறிஸ் வோக்ஸ், ஆடுகளத்தின் ஓரத்தில் இடது கையில் பேட்டிங் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது. வோக்ஸ் காயம் காரணமாக ஒரு கையால் பேட் செய்தாலும், கஸ் அட்கின்சனுடன் இணைந்து இங்கிலாந்தை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
ஆட்டத்தின் முதல் ஓவரில், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஓவர்டன் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து, இங்கிலாந்து மீதிருந்த அழுத்தத்தைக் குறைத்தார். ஆனால் ரசிகர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சிராஜ் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில், அகலமான பந்தைத் தட்டிவிட்ட ஸ்மித்தை வெளியேற்றினார். பின்னர், எல்.பி.டபிள்யூ முறையில் ஓவர்டனை அவுட்டாக்கினார்.
ஓவலில் இந்தியா அதிரடி.. 6 ரன் வித்தியாசத்தில் ஸ்டன்னிங் வெற்றி.. டெஸ்ட் தொடர் சமன்!
நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
அருணாச்சலப் பிரதேச விவகாரம்: ராகுல் காந்தி பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தொடர் மழை... வைகை அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!
கவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்!
திமுகவின் சுரண்டல் கொள்கையால் மக்கள் வாழ்க்கை நடத்தவே வழியின்றி தடுமாறுகின்றனர்: டாக்டர் அன்புமணி!
முதல்வருடன் சந்திப்பு.. ஓபிஎஸ் திடீர் அறிக்கைக்கு இது தான் காரணமா.. அடுத்து என்ன செய்வார்?
சிபு சோரன்.. மறக்க முடியாத அரசியல்வாதி.. ஜார்க்கண்ட் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவு!
{{comments.comment}}