சென்னை: பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், 1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இது தவிர விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனை படைத்தது. ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தார். இவருடன் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
இந்தியன் படம் வெளிவந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலும் நேற்று வெளியாகி விட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டையும் பிரமாண்டமாக நடத்த ஷங்கர் முடிவு செய்துள்ளார்.
ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில்,கேம் ரேஞ்சர் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராம் சரண், அவரது தந்தை சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை இசை வெளியீட்டு விழாவுக்கு அழைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாரம். ஜூன் 1ஆம் தேதியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் நடிகர் கமலஹாசன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர். இசை வெளியீட்டு விழாவையே பிரமாண்டமாக நடத்தினால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும் என்பது லைக்காவின் திட்டமாகும்.
ரெட் ஜெயிண்ட் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இந்தியன் 2 படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}