பேரு விவேக் ராமசாமி.. பதவி "அமெரிக்க அதிபர்".. நிஜமாக நடந்தால் சூப்பரா இருக்கும்ல!

Feb 23, 2023,10:06 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி என்பவர் போட்டியில் குதித்துள்ளார். இவர் தொழில்நுட்ப தொழில்முனைவோர் ஆவார்.


அமெரிக்க நாடு, சீனாவை நம்பியிருக்கும் நிலையை முழுமையாக மாற்றுவேன் என்ற கோஷத்துடன் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் குதித்துள்ளார். ஏற்கனவே குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டிக் களத்தில் உள்ளார். அதேபோல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  நிக்கி ஹாலே போட்டியில் உள்ளார் என்பது நினைவிருக்கலாம். அடுத்தடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு தலைவர்கள் அதிபர் தேர்தல் களத்தில் குதித்திருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் - சுப்ரீம் கோர்ட்



நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநராக இரண்டு முறை பதவிவகித்தவர். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


37 வயதாகும் விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை பெயர் விவேக் கணபதி. தாயார் பெயர் கீதா ராமசாமி. தந்தை தனது பொறியியல் படிப்பை முடித்ததும் அமெரிக்காவுக்கு வேலைநிமித்தம் இடம் பெயர்ந்தார். அங்கு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றினார்.தாயார் கீதா ஒரு டாக்டர் ஆவார். இருவரும் ஓஹையோவில் செட்டிலானவர்கள்.  தனது போட்டி குறித்து பாக்ஸ் நியூஸ் சானலில் ஒளிபரப்பான டக்கர் கார்ல்சன் ஷோவின்போது வெளியிட்டார் விவேக் ராமசாமி.


சீனாவை இன்னும் சார்ந்திருக்கும் நிலையில் அமெரிக்கா இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். நான் அதை மாற்றுவேன். அமெரிக்காவின் மதிப்பை மீண்டும் கொண்டு வருவேன். அமெரிக்கர்களின் வாழ்க்கையில்அமெரிக்கா என்ற மகத்தான மதிப்பு மீண்டும் உயரிய இடத்தை  அடைய பாடுபடுவேன் என்றார் அவர்.


இவர் கடந்த 2014ம் ஆண்டு ரோய்வான்ட் சயின்ஸஸ் என்ற ஆய்வு அமைப்பை உருவாக்கினார். இந்த நிறுவனத்தில் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பல்வேறு ஹெல்த்கேர் நிறுவனங்களையும், தொழில்நுட்ப நிறுவனங்களையும் உருவாக்கினார். ஸ்டிரைவ் அஸ்ஸட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை  கடந்த ஆண்டு தொடங்கினார்.


சீனாவின் எழுச்சியால் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ள அவர், அந்த மிரட்டலிலிருந்து அமெரிக்காவை மீட்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்