அடேங்கப்பா.. இப்பவே இவ்வளவு வித்தைகள் காட்டுறாரே விவேக் ராமசாமி!

Aug 23, 2023,11:53 AM IST
வாஷிங்டன்:  அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட மும்முரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்திய அமெரிக்கர் விவேக் ராமசாமி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை போட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் விவேக் ராமசாமி. தொழிலதிபரான அவர் அங்கு குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடக் களம் குதித்துள்ளார். இவருடன் சேர்த்து மேலும் 3 இந்திய வம்சாவளியினர் போட்டிக் களத்தில் இருந்தாலும் கூட விவேக் ராமசாமிக்குத்தான் ஆதரவு பெருகி வருகிறது.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் விவேக் ராமசாமி இடையேதான் யார் வேட்பாளர் என்பதில் போட்டிஅதிகமாக உள்ளது. இதில் வென்று விவேக் ராமசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதுவே ஒரு மிகப் பெரிய சாதனைதான்.

இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யாருமே போட்டியிட்டதில்லை. எனவே விவேக் ராமசாமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் அது முதல் சாதனையாக மாறும். தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் இந்திய அமெரிக்க அதிபராகும் சாதனையையும் அவர் படைப்பார். அது உலக சாதனையாகாவும் மாறும்.. அது அப்புறம் நடக்கட்டும்.

இப்போது விவேக் ராமசாமியின் பேச்சுக்கள் பலரையும் கவர்ந்திழுக்க ஆரம்பித்துள்ளனவாம். டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கே கூட விவேக் ஆதரவாளராக மாறி விட்டார். பலரும் அவரது பேச்சுக்களை வரவேற்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு தொலைக்காட்சிகளும் கூட அவரது பேட்டிகளை ஒளிபரப்ப ஆர்வம் காட்டுகின்றன.

இந்த நிலையில் விவேக் ராமசாமி செய்த உடற்பயிற்சி வீடியோ வைலாகியுள்ளது.  அந்த வீடியோவில் ஜம்ப் செய்து உடற்பயிற்சி செய்கிறார் விவேக் ராமசாமி. மேலும் மேலும் விவாதங்களுக்கு என்னை தயார் செய்கிறேன் என்று கூறி கேப்ஷனும் போட்டுள்ளார் விவேக் ராமசாமி. இது பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. மேலும் பலர் அங்கு வந்து கமெண்ட்டுகளையும் போட்டு கலகலக்க வைத்து வருகிறார்கள்.

இப்பவே இத்தனை வித்தை காட்டுகிறாரே.. நாளைக்கு அதிபரானால் என்னெல்லாம் பண்ணப் போறாரோ!

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்