- சகோ. வினோத்குமார்
கொல்கத்தா: வங்கதேசம், இரண்டாம் உலகப்போரில் கைவிடப்பட்ட விமானதளத்தை புதுப்பிக்கும் பணியை துவங்கியுள்ளது. அதே நேரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்கள் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் "சிக்கன் நெக்" பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் பாதுகாப்பு அரண்களை அமைக்க துவங்கியுள்ளது.
இந்தியாவை வட கிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் பகுதி சிக்கன்நெக் , சிலிகுரி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த பகுதி மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களில் அமைந்துள்ள பகுதியாகும். இந்தியாவை எட்டு வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் குறுகிய நிலப்பரப்பாகும். இதன் நீளம் 22 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.

1971 ஆம் ஆண்டு முன்பு வரை வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தானாகவும் தற்போது உள்ள பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும் இரண்டும் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நாடாக இருந்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழி பேசிய மக்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என உணர்ந்தனர். எனவே அங்குள்ள மக்கள் தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவு கொடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக 1971 டிசம்பர் 3 ஆம் தேதி நேரடி போரில் ஈடுபட்டது. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாசி இந்தியாவிடம் சரணடைந்தார். இதன் பின்னர் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
வங்கதேசம் உருவாக மிக முக்கிய காரணமாக இந்தியா இருந்ததால் இரண்டு நாட்டிற்கும் இடையே நட்புறவு என்பது பலமாக இருந்து வந்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிடம் தஞ்சம் அடைந்தார். அதேநேரம் வங்கதேசம், சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தியது. இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் வங்கதேசத்தில் அதிக அளவில் ஏற்பட்டன. இதுபோன்ற காரணங்களால் இந்தியா வங்கதேசம் இடையே இருந்த நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
தற்போது, சீனாவிடம் இருபது J-10CE போர் விமானங்களையும், பாகிஸ்தானிடம் JF 17 தண்டர் பிளாக் 3 போர் விமானங்களையும் வாங்க திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிக்கன் நெக் பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது கைவிடப்பட்ட விமானதளத்தையும் வங்கதேசம் தற்போது சீரமைத்து வருகிறது. எதிர்காலத்தில் போர் சூழல் ஏற்பட்டால் சிக்கன் நெக் பகுதி எளிதான இலக்காக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே இந்திய ராணுவம் இந்தப் பகுதிகளில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து மூன்று ராணுவ முகாம்களை அமைத்து வருகிறது.
தற்போது அமைக்கப்பட உள்ள இவை முகாம்களாக மட்டும் செயல்படாமல் ராணுவ தளவாடங்கள் வைக்கவும், அதிநவீன போர் உபகரணங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாம்கள் மூலம் சற்று பலவீனமாக கருதப்பட்ட சிக்கன் நெக் பகுதி இனி பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றாக செயல்படும் என்று கருதப்படுகிறது.
(சகோ. வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
Festive month.. வருடத்தின் கடைசி மாதம்தான்.. ஆனால் அடுத்த ஆண்டின் வெற்றிக்கான வழிகாட்டி!
சிக்கன்நெக் பகுதியில் செக் வைத்த இந்தியா.. வங்கதேசத்தின் வியூகத்திற்கு பதிலடி!
வெயிட்டான 8 டிப்ஸ்.. சற்று பழகித்தான் பாருங்களேன்.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
ஆல் பாஸ்.. ஒரு ஃபீல் குட் மூவி.. பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி, சசிக்குமார்
பிரண்டை துவையல்.. டேஸ்ட்டானது.. உடம்புக்கு ரொம்ப பூஸ்ட்டானதும் கூட!
{{comments.comment}}