டெல்லி: டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இன்று காலை டெல்லி வந்து சேர்ந்து இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இன்று காலை இந்திய அணி தாயகம் திரும்பியது. சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்பிய இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் மவுரியாவுக்குச் சென்று தங்கினர். அங்கு கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சென்று கிரிக்கெட் அணியினர் சந்தித்தனர். பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் பிரதமரைச் சந்தித்த அவரது வாழ்த்துக்களை பெற்றனர். அவர்களை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்துக் கெளரவித்தார். பின்னர் அவர்களுடன் அவர் உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மும்பை சென்று பி சி சி ஐ ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அப்போது மும்பையில் இந்திய அணி வீரர்கள் T20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தில் செல்ல உள்ளனர். மும்பை வாங்கடே மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெறவுள்ளது.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}