போபால்: நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் களம் இறக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.23.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். 2021ல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 320 ரன்கள் குவித்து அணி இறுதிப்போட்டி வர முக்கிய பங்காற்றியவர்.
இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நான் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்ததால், கிரிக்கெட் மட்டுமே விளையாடுவேன் எனக் கூறி எனது பெற்றோர்களை சமாளிப்பது கடினம். எனது பெற்றோர்கள் நான் விளையாட்டிலும் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பினார்கள். புதிதாக எந்த வீரர்கள் வந்தாலும், நீங்கள் படிக்கிறீர்களா என்று தான் கேட்பேன். என்னால் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்கள் செய்ய முடியும் என்பதால் செய்கிறேன்.
கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் அறிவு மட்டும் இன்றி. பொது அறிவையும் கற்க வேண்டும். உங்களால் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டபடிப்பை முடிக்க முடிந்தால், நீங்கள் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும். நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவு தான் களத்தில் கூட நான் சரியான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகிறது.நான் தற்போது முனைவர் பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை அடுத்த முறை நேர்காணல் செய்யும் போது நான் டாக்டர் வெங்கடேஷ் ஆக இருப்பேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி
மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
{{comments.comment}}