டெல்லி: அமெரிக்கா இந்திய ஏற்றுமதிக்கு 50% வரி விதித்ததால், ரூ.87,000 கோடி மதிப்புள்ள இந்திய ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
பல ஏற்றுமதியாளர்கள் வியட்நாம், இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுகின்றனர். ஏனெனில், அங்கு வரி குறைவாக உள்ளது. Pearl Global Industries நிறுவனம், அமெரிக்காவிற்கான உற்பத்தியை வெளிநாடுகளுக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. அதாவது இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள வரியால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய, ஏற்றுமதியாளர்கள் சந்தைகளை விரிவுபடுத்தவும், புதிய கூட்டணிகளை உருவாக்கவும் உற்பத்தியாளர்கள் யோசித்து வருகின்றனர். இதனால் இந்தியத் தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பல மாற்றங்கள், பாதிப்புகள் வரும் நாட்களில் ஏற்படும் என்று தெரிகிறது.

அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் கூட இந்தியத் தொழில்துறையில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை, குறையவில்லை. வழக்கம் போல நடந்து வருகிறது.. வேறு நாடுகள் மூலம் ஏற்றுமதியைத் தொடர நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதால் உற்பத்தி குறைவில்லாமல் தொடர்கிறது.
இந்தியாவிடம் மிகப் பெரிய உற்பத்தி திறன், திறமையான தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளதால், அமெரிக்காவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும், மீண்டும் அமெரிக்க சந்தையில் இந்தியா தனது இழந்த இடத்தைப் பெறும் என்றும் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}