பேஸ்புக் மூலம் பூத்த காதல்.. பாகிஸ்தானுக்குக் கிளம்பிப் போன இந்தியப் பெண்!

Jul 24, 2023,03:54 PM IST

பெஷாவர்: பேஸ்புக் மூலம் பாகிஸ்தான் நபருடன் நட்பு கொண்ட இந்தியப் பெண் ஒருவர் அந்த நாட்டுக்குப் போயுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கைலார் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான அஞ்சு. இவருக்குத் திருமணமாகி விட்டது. இவர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லா என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளுக்கு நாள் பலப்பட்டு காதலாகி விட்டது. நஸ்ருல்லாவைப் பார்க்க விரும்பினார் அஞ்சு. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக்துன்வாலா மாகாமத்தில் உள்ள உப்பர் தார் மாவட்டத்திற்கு அவர் பயணப்பட்டார்.



முதல் முறை அவர் பாகிஸ்தானுக்கு வந்தபோது அவர் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரது  ஆவணங்களை சரி பார்த்தனர். எல்லாம் சரியாக இருக்கவே அவரை நஸ்ருல்லாவிடம் ஒப்படைத்தனர்.  மேலும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது என்பதற்காக அவருக்குப் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளதாம்.

இந்த விவகாரம் தற்போது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுவின் கணவர் அரவிந்த் கூறுகையில் ஜெய்ப்பூர் போய் விட்டு வருவதாகத்தான் என்னிடம் கூறியிருந்தார் அஞ்சு.  ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் பாகிஸ்தானில் இருப்பது இப்போதுதான் எனக்குத் தெரிய வந்துள்ளது என்றார். தற்போது அவர் லாகூரில் இருப்பதாகவும் அரவிந்த் கூறியுள்ளார்.

இந்தத் தம்பதிக்கு 2007ம் ஆண்டு திருமணமானது. அது முதல் இணைந்தே இருந்து வந்தனர். தற்போது நஸ்ருல்லாவைத் திருமணம் செய்யும் எண்ணம் அஞ்சுவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.அப்படி இருக்கையில் ஏன் அவர் பாகிஸ்தான் போனார் என்பது தெரியவில்லை. அவரிடம் முறையான பாஸ்போர்ட் எல்லாமே இருக்கிறதாம். அவர் மீது அவரது குடும்பத்தினர் இதுவரை போலீஸில் புகார் எதுவும் தரவில்லை.

அரவிந்த்  - அஞ்சு தம்பதிக்கு 15 வயதில் மகள், 6 வயதில் மகன் உள்ளனர். தனது மனைவி மீண்டும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அரவிந்த் கூறியுள்ளார்.

இப்படித்தான் சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து சீமா ஹைதர் என் பெண் இந்தியாவுக்கு வந்து இந்தியரை மணந்தார். அது சர்ச்சையானது. இப்போது இந்தியாவிலிருந்து ஒரு பெண் பாகிஸ்தான்  போயிருப்பது மீண்டும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்