- கலைவாணி கோபால்
டெல்லி: இண்டிகோ நிறுவனம் கடந்த ஒரு வாரமாக பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஒரு வார கால விமானப் பயண ரத்துக்கு ஈடு செய்யும் வகையில் பயணிகளின் கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தரவும் இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக ஏற்பட்ட இன்டிகோ விமான சேவை நிறுத்தம் அனைவரும் அறிந்ததே. இன்று ஏழாவது நாளாவதாக இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் 70க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதனால் விமான பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இண்டிகோ நிறுவனத்தின் இந்த போக்கால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், விமான பயணிகள் டிக்கெட்டை முன் பதிவு செய்த அனைத்து பணமும் அதாவது முழு தொகையும் இண்டிகோ நிறுவனம் திருப்பி தருவதாக உறுதி அளித்து உள்ளது. மேலும் நாளை மறுநாள் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது..

விமான சேவை நிறுத்தப்பட்டதற்கு காரணமான, விமான நேர அட்டவணையை ஒழுங்குபடுத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் அளித்துள்ளது..
இன்று ஹைதராபாத் - பெங்களூர் இடையான 150 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்தது விமான விமான பயணிகளிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
{{comments.comment}}