இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொலை சாதாரண விபத்துதான்.. உத்தரகாண்ட் அமைச்சர்

Feb 01, 2023,04:22 PM IST
டேராடூன்: உயிர்த்தியாகம் செய்வது என்பது காந்தி குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மரணங்கள் சாதாரண விபத்துதான் என்று கூறியுள்ளார் உத்தரகாண்ட்  அமைச்சர் கணேஷ் ஜோஷி.



டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார் அமைச்சர் ஜோஷி. அவர் மேலும் கூறுகையில், நான் ராகுல் காந்தியின் அறிவைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.  உயிர்த்தியாகம் என்பது அவர்களது குடும்பத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. சுதந்திரப் போராட்டத்தின்போது பகத்சிங், வீர் சவர்க்கர், சந்திர சேகர் ஆசாத் போன்றோரின் உயிர்த்தியாகத்தை நாடு பார்த்தது. அதுதான் உயிர்த்தியாகம். 
காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மரணங்கள் சாதாரண விபத்து. 

உயிர்த் தியாகத்திற்கும், விபத்துக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் புரியாமல் பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. காரணம், அவர்களது அறிவு அவ்வளவுதான். அதற்கேற்பத்தானே அவர்களால் பேச முடியும்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றிகரமாக முடிய பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம். இதற்காக நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.  ஆர்ட்டிகிள் 370 ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், ஜம்மு காஷ்மீரிலிருந்து ராகுல் காந்தி பத்திரமாக திரும்பியிருக்க முடியாது. லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியிருக்க முடியாது என்றார் கணேஷ் ஜோஷி.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்