ஒரே கையில் 16 தோசை தட்டுகள்.. ஆச்சரியப்பட வைத்த வெயிட்டர்.. சபாஷ் போட்டஆனந்த் மகிந்திரா!

Feb 02, 2023,12:25 PM IST
மும்பை: ஹோட்டல் வெயிட்டர் ஒருவர், ஒரே கையில் 16 தோசை தட்டுக்களை அப்படியே அலேக்காக கொண்டு செல்லும் வீடியோவை ஷேர் செய்து  அவருக்கு சபாஷ் போட்டுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.



மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது  வித்தியாசமான வீடியோவைப் போட்டுக் கொண்டிருப்பது வழக்கம். பெரும்பாலும் திறமையாளர்கள்  குறித்த வீடியோவாக அவை இருக்கும்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ போட்டுள்ளார் ஆனந்த் மகிந்திரா. ஒரு ஹோட்டலில் வெயிட்டர் ஒருவர் 16 தோசைத் தட்டுக்களை ஆடாமல் அசையாமல் தனது இடது கையால் எடுத்துச் செல்லும் காட்சியே அது. அத்தனையும் சுடச்சுட தட்டில் வைக்கப்பட்ட மசால் தோசையாகும்.

இந்த வீடியோவைப் போட்டிருந்த ஆனந்த் மகிந்திரா, வெயிட்டர்களின் திறமையை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் இந்த ஜென்டில்மேன் தான் நிச்சயம் தங்கம் வாங்குவார் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அடுத்தடுத்து ஒவ்வொரு தோசைத் தட்டாக வாங்கி வாங்கி தனது கையில் அடுக்கிக் கொண்டே வரும் அந்த வெயிட்டர், 16 தட்டுகள் சேர்ந்ததும் அதை அப்படியே பொறுமையாக எடுத்துக் கொண்டு நகர்ந்து செல்கிறார். எந்தத் தடுமாற்றமும் அவரிடம் காணப்படவில்லை.

நம்ம ஊர் பாரம்பரியமான வேட்டியில் அந்த ஹோட்டல் சர்வர்கள் உள்ளனர். அது பெங்களூரில் உள்ள வித்யார்த்தி ஹோட்டல் என்று பலரும் கமெண்ட்டில் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்