சென்னை: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது youtube இல் பத்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியுள்ள ஆல்பம்தான் இனிமேல். இந்தப் பாடல் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இப்பாடல் மூலம் முதன் முறையாக நடிகராக களமிறங்கியுள்ளார்.
முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ், திருமணம் என அனைத்தும் கலந்து 2கே கிட்ஸ்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த ஆல்பம் உள்ளது. அதை விட முக்கியமாக ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜின் கெமிஸ்ட்ரி, ரசிகர்களின் மனதை அள்ளி விட்டது.. அடடே நம்ம லோகியா இது.. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு கலாய்த்துத் தள்ளி விட்டனர் ரசிகர்கள்.
இன்றைய தலைமுறையின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், மாடர்ன் வாழ்க்கையில் இளைஞர்களின் காதல் நிலைகளையும், அதன் ஏற்ற இறக்கங்களுடன் இப்பாடல் சித்தரிக்கிறது. இப்பாடல் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இனிமேல் ஆல்பம் பாடல் இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே, ஸ்ருதி ஹாசன் மீண்டும் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அத்வி சேஷ் நடிக்கும் டகாய்ட் படத்தில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள சர்வதேச படமான தி ஐ படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}