- மீனா
சென்னை: இன்ஸ்டன்ட் மிக்ஸ் பத்தி நாம பார்க்க ஆரம்பிச்சிருக்கோம் இல்லையா.. அதுல இன்னிக்கு 2வது ஐட்டத்தைப் பார்க்கலாமா.
ஒரு பிரச்சனைக்கு இன்ஸ்டன்ட்டா தீர்வு கிடைத்தால் நமக்கெல்லாம் அவ்வளவு சந்தோஷம் வரும். ஆனால் சீக்கிரமா சமைக்கணும் அதே நேரத்தில் ஹெல்தியாவும் இருக்கணும் என்ற பிரச்சினைக்கு இன்ஸ்டன்ட் மிக்ஸ் ஒரு தீர்வு என்றால் அது இன்னும் எவ்வளவு மகிழ்ச்சியை தரும்.
அந்த மாதிரி ஒரு மிக்ஸ் தான் முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அது மட்டுமல்ல அந்த மிக்ஸ் வைத்து ஒரு ரெசிபியும் எப்படி செய்வது என்று பார்த்தோம். அதே மாதிரி இன்னிக்கு இன்னொரு ஐட்டம் பார்க்கப் போறோம்.. வாங்க என்னன்னு சொல்றேன்..
துவரம் பருப்பு
கடலைப்பருப்பு
பாசிப்பருப்பு
உளுந்தம் பருப்பு இத்தனை பருப்புகளோடு சில பொருட்களையும் சேர்த்து இன்ஸ்டன்ட் மிக்ஸ் எப்படி ரெடி பண்ணுவது என்று முதல் கட்டுரையில் பார்த்தோம். அந்த இன்ஸ்டன்ட் மிக்ஸை வைத்து வேறொரு ரெசிபி ஆன "அடை தோசை" எப்படி செய்வது..அதைத்தான் இப்ப பார்க்கப் போறோம்.
தேவையான பொருட்கள்:
இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொடி-1 கப்
வெங்காயம்-1/4 கப்
பச்சை மிளகாய்-2
முருங்கைக்கீரை-1 கைப்பிடி அளவு
நறுக்கிய மல்லி இலை, கருவேப்பிலை-சிறிதளவு
நல்லெண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவைக்கேற்ப
முதலில் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொடியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸில் மேலும் நமக்கு தண்ணீர் தேவை என்றால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் சிறிது மோர் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,நறுக்கிய கருவேப்பிலை ,மல்லி இலை ,முருங்கைக்கீரை தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை தோசை கல்லில் தோசையாக ஊற்றி எடுக்கலாம். இப்போது இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொடியில் செய்த அடை தோசை தயார். இப்போது அடை தோசை செய்வதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பே பருப்புகளை ஊறவைத்து அரைக்க வேண்டிய அவசியம் இல்லை . பருப்புகளை உறவைக்க மறந்தாலும் கவலை இல்லை.இந்த மிக்ஸை ரெடி பண்ணி வைத்துக் கொண்டால் ஒரு மணி நேரத்திலேயே நாம் இந்த அடை தோசையை ரெடி பண்ணி விடலாம்.
ஆபிஸ் போகும் பெண்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் வீட்டிற்கு வந்த பின்னாடி இரவு டிபனுக்கு கூட இதை செய்து கொடுத்து வேலையை மேலும் சுலபமாக்கிக் கொள்ளலாம். காலை உணவுக்கு இட்லியும், இரவு டிபனுக்கு அடை தோசையும் செய்வதோடு, இந்த மிக்ஸ் பொடியில் ஈவினிங் ஸ்னாக்ஸ் கூட செய்யலாம். அது எப்படி?
அதை நாளைக்கு சொல்லட்டா.. பை.. பை!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}