சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்..ஒன்றிணைவோம் வறுமையை ஒழிக்க

Oct 17, 2023,02:43 PM IST

- மீனா


"கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை"

என்ற அவ்வையின் கூற்றுப்படி வறுமை எவ்வளவு கொடுமையானது என்பதனை அனுபவித்தவர்களிடம் கேட்டால் நன்றாக தெரியும் .அதனிலும் இளமைக்கால பருவத்தில்  வறுமையை அனுபவிப்பவர்களின் நிலைமை மேலும் கொடுமையானது என்பதனையே இது விளக்குகிறது. இப்பொழுது இதை எடுத்துரைக்க காரணம் இன்று  சர்வதேச வறுமை ஒழிப்பு தினம். 


  சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின்  சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் செவ்வாய்க்கிழமையான இன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைபிடிக்கப்பட்டது. உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசி கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐநா சபை 1992 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது . இதன் நோக்கம் வறுமையை ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும்  என்பதே ஆகும்.  




இந்த சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கபடுவதின் மூலம் உலகம் முழுவதும்  இன்னும் வறுமை நிலை நிலவுகிறது என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது . இந்த நாள் அதன் அடிப்படை காரணங்களையும், புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த உதவுகிறது. ஏனென்றால் இத்தகைய சூழ்நிலையை உணரும் போதும் மற்றும் இதை புரிந்து கொள்ளும்போதும் தான் இந்த பிரச்சனைக்கான மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. வறுமை என்பதன் முழு அர்த்தம் உண்ண உணவு இல்லாமல் இருப்பது, உடுத்த உடை இல்லாமல் இருப்பது ,இருக்க இடம் இல்லாமல் இருப்பது இத்தகைய ஒரு மனிதனின் அத்தியாவசிய  தேவைகள் கூட அவனுக்கு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவன் வறுமையில் வாடுகிறான்  என்பது நமக்கு எல்லாம் தெரியும். இத்தகைய வறுமையின் காரணமாக ஒருவனுக்கு அடிப்படைக் கல்வியும் கிடைக்காமல் சக மனிதர்களிடம் மரியாதையும் கிடைக்காமல் அற்பமாக எண்ணப்படும் சூழ்நிலையும் உள்ளது. 


இத்தகைய வறுமை நிலையில் உள்ளவர்கள் உலகில் பல நாடுகளில் இருக்கிறார்கள். அதில் முதன்மையான நாடு நைஜீரியா மற்றும் இரண்டாவதாக இருந்த நம்முடைய இந்தியா இப்பொழுது மூன்றாவது இடத்திற்கு சென்று இருப்பது  ஒரு ஆறுதலான விஷயம்தான். ஏனென்றால் இதற்கு முக்கியமான காரணம் தனிநபரின் வருமான ஓரளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது . ஏழ்மை என்பது ஒரு சமூக போராட்டம் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் தனி மனிதன் மற்றும் ஒரு கிராமம், நகரத்தில் வறுமையின் தாக்கம் அதிகரிக்கும் போது அது வெகு சீக்கிரத்தில் சமுதாயத்தையே பாதிக்கிறது. இத்தகைய வறுமையை ஒழிப்பதற்கு தீர்வு என்னவென்றால் வறுமையோடு போராடுபவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு உதவி செய்வதே. மேலும் வறுமையில் வாழ்பவர்கள் நம் அருகில் கூட இருக்கலாம் அவ்வாறு நாம் உணரும்போது அன்போடு அவர்களுக்கு செய்யும் உதவி வறுமை நிலையை வெகு சீக்கிரத்தில் மாற்ற முடியும். மேலும் அவர்கள் வாழ்வாதாரத்தை கூட்டி கொள்வதற்கு வழிகளையும் ஆலோசனையோ அவர்களுக்கு கொடுப்பதின் மூலமும் இந்த நிலை மாற அதிக வாய்ப்பு உள்ளது. 


ஒருவருக்கு மீன் ஒன்றை பிடித்துக் கொடுப்பதன் மூலம் அவனுடைய ஒரு நாள் வறுமை போக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கும் போது அவனுடைய வாழ்நாள் வறுமை போக்கப்படும் என்ற கூற்றின்படி அவ்வாறான சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கலாம். மற்றவர்கள் செய்வார்கள் என்று ஒவ்வொருவரும் ஒதுங்கிப்போகும் சூழ்நிலையை மாற்றி, நாம் ஏதாவது செய்யலாம் என ஒவ்வொருவரும் நினைக்கும் போது இந்த  நிலையை மாற்ற முடியும். இந்த சூழ்நிலை சாதகமாக மாறினால் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா வறுமையில் வாடும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


 என்னங்க இனிமேலாவது நம் அருகில் இருக்கிறவர்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியும் போது அவர்கள் கேட்காமலே நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்ய முயற்சி செய்யலாமே.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்