டெல்லி: 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அக்டோபர் 1ம் தேதி எழுதியுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விளையாட்டு திருவிழா தான் ஒலிம்பிக். இந்த ஒலிம்பிக் விளையாட்டில் உலகளவில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது வழக்கமாகும். இந்த விளையாட்டு போட்டியை தங்கள் நாடுகளில் தான் நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டினரும் போட்டு போடுவது வழக்கம். இந்த போட்டியினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் கிடைக்கும். அத்துடன் இது நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது.

2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 2036ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் அக்டோபர் 1ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய விளையாட்டுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் பட்சத்தில், போட்டிகள் அனைத்தும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}