IPL 2024: வீறு கொண்டு காத்திருக்கும் விராட் கோலி படை.. சேப்பாக்கை அதிர வைக்க சி.எஸ்.கே.யும் ரெடி!

Mar 22, 2024,10:06 AM IST

சென்னை: 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.


புதிய கேப்டனுடன் களம் இறங்கினாலும் கூட அதே காரத்துடன், அதே வேகத்துடன், அதே அதிரடியுடன் களத்தைக் கலக்க காத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மறுபக்கம், விராட் கோலி தலைமையிலான அணியும், முதல் போட்டியிலேயே சென்னைக்கு ஸ்வீட் ஷாக் கொடுக்க முயலும் என்பதால் போட்டி பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.


சென்னை மைதானத்தைப் பொறுத்தவரை விராட் கோலியின் ரெக்கார்ட் பிரமாதமாக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் இங்கு 111 ஆக உள்ளது.  மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஸ்கிப்  செய்த விராட் கோலி நல்ல ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களம் திரும்பியுள்ளதால் புத்துணர்வுடன் இருப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஓப்பனர் மாத்யூ ஹெய்டன் கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலியை குறைத்து மதிப்பிடாது என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.




பெங்களூரு அணிக்கே இவ்வளவு பில்டப் இருந்தால் சொந்த மண்ணில் விளையாடப் போகும் மண்ணின் மைந்தர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் எந்த அளவுக்கு தயாராக இருக்கும்.. புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் அதகளப்படுத்த சென்னையும் தயாராக உள்ளது. இந்தத் தொடர்தான் அனேகமாக தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதால் முதல் போட்டியிலிருந்தே அதிரடி காட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.


ஐபிஎல் தொடர் ஒன்றின் தொடக்க ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதவிருப்பது இது 9வது முறையாகும். போட்டியின் தொடக்கத்தில் கண்கவர் தொடக்க விழா நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்று பெர்பார்ம் பண்ணவுள்ளனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனும் அதுவே. கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதிரடியாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.  இதன் மூலம் அதிக கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை அது சமன் செய்தது.


இந்தத் தொடரில் தோனி கேப்டனாக இல்லை. ஆனால் வீரராக அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேப்டன் தலைமையில் வலுவான சென்னையை உருவாக்க இதுவே சரியான தருணம் என்பதால்தான் தோனி தானாக முன்வந்து கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். எனவே இந்தத் தொடரில் அவர் அணியையும், ருத்துராஜையும் அழகாக வழி நடத்தி அணியை மேலும் வலுவாக்கி விட்டு, இந்தத் தொடரோடு விடை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மாலை ஆறரை மணிக்கு தொடக்க விழாவோடு தொடங்குகிற. சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்