சென்னை: ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முத்திரை வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லையாம். 2 மாதங்கள் பொறுத்திருக்குமாறும், அதன் பிறகு முடிவைச் சொல்வதாகவும் அணி நிர்வாகத்திடம் தோனி கூறியிருக்கிறாராம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் 2024 கோப்பைக் கனவு தகர்ந்து போய் விட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இந்தப் போட்டியில் தோனி விளையாடிய விதமும், அவர் கடுமையாக முயன்ற விதமும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டது. இந்தத் தொடர் தோனிக்கு கடைசி தொடராக இருக்கக் கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனால் தொடரை வென்று கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் எல்லாமே கனவாகி விட்டது. இந்த நிலையில் தோனி இப்போதைக்கு ஓய்வு பெற வாய்ப்பில்லை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அணி நிர்வாகத்திடம் அவர் தனது ஓய்வு முடிவை இதுவரை அறிவிக்கவில்லையாம். 2 மாதங்கள் பொறுத்திருக்குமாறு மட்டுமே அவர் கூறியிருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
தற்போது ராஞ்சிக்குத் திரும்பி விட்டார் தோனி. பெங்களூரு அணியிடம் தோற்ற விதம் அவரை கடுமையாக அப்செட் செய்துள்ளதாம். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் போட்டி முடிந்ததுமே அவர் கிளம்பி சொந்த ஊருக்குப் போய் விட்டார். ஓரிரு மாதங்களில் அவர் தனது ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. அவர் மீண்டும் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பெங்களூருக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த அந்த 110 மீட்டர் சிக்ஸரை அனைவரும் சிலாகிக்கின்றனர். இந்த ஒரு சிக்ஸர் மூலம் தான் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதை தோனி உணர்த்தி விட்டார். எனவே மீண்டும் ஒரு சீசன் அவர் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
{{comments.comment}}